நைட் நேரத்துல இந்த அறிகுறி தெரியுதா? அப்ப உங்க இதயம் ஆபத்தான நிலைமையில இருக்குன்னு அர்த்தம்.. உஷார்…
Winter Heart Attack Symptoms In Tamil: நமது உடலிலேயே சற்றும் ஓய்வெடுக்காமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு தான் இதயம். ஏனெனில் இதயம் தான் உடலுறுப்புக்களின் இயக்கத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இரத்தத்தின் மூலம் அனுப்புகிறது.
இப்படி அயராது உழைத்துக் கொண்டிருப்பதால், நமது இதயத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. அதுவும் ஒருவர் உடலுக்கு முழு ஓய்வை அளிக்கும் இரவு நேரத்தில் ஒருசில அறிகுறிகள் தெரிகிறது என்றால், இதயத்தில் ஏதோ தீவிர பிரச்சனை உள்ளது அல்லது மாரடைப்பு ஏற்படப் போகிறது என்று அர்த்தம்.
சமீப காலமாக மக்கள் மாரடைப்பால் அதிகமாக இறந்து வருகிறார்கள். அதுவும் குளிர்காலத்தில் தான் நிறைய பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. எனவே நீங்கள் குளிர்காலங்களில் இரவு நேரத்தில் பின்வரும் அறிகுறிகளை அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இந்த அறிகுறிகள் எல்லாம் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகள். இப்போது அந்த அறிகுறிகளைக் காண்போம்.
இதயம் சேதமடையும் போது என்ன நடக்கும்?
ஏற்கனவே கூறியது போல, இதயம் தான் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. எனவே இந்த இதயத்தில் பிரச்சனை ஏற்படும் போது, ஒட்டுமொத்த உடலுமே பாதிக்கப்படும். ஒருவரது இதயத்தில் ஏற்படும் பிரச்சனையானது, மாரடைப்பு, பக்கவாதம், இதய செயலிழப்பு போன்றவற்றின் அபாயத்தை அதிகரித்துவிடும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் இதய ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். இதயத்தில் இருக்கும் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் மரணத்தைத் தவிர்க்கலாம். இரவு நேரத்தில் மூச்சுவிடுவதில் சிரமம் திடீரென்று மூச்சுவிடுவதில் ஒருவர் சிரமப்பட்டால், அது இதயம் ஆபத்தான நிலையில் உள்ளது என்பதன் முதல் அறிகுறியாகும். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும். சுவாசிப்பதற்கும், இதயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று பலரது மனதில் கேள்வி எழலாம். ஒருவர் படுத்திடுக்கும் போது, உடல் திரவங்களை மறுபகிர்வு செய்யும் போது, நுரையீரலில் திரவம் நிரம்புகிறது. இந்நிலையில் இதயத்தில் ஏற்கனவே பிரச்சனை இருந்தால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும்.