இந்திய சாலையில் துபாய் பதிவெண்ணில் வலம் வந்த ‘T’ சின்னம் கொண்ட கார்! இவங்க டெஸ்ட்டிங் பணியை தொடங்கிட்டாங்களா!!
இந்தியா சாலையில் துபாய் பதிவெண் கொண்ட வாகனம் ஒன்று வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் விற்பனையிலேயே இல்லாத அந்த கார் வலம் வந்திருப்பது இந்தியர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதற்கான காரணம் என்ன? அது என்ன கார் மாடல்? அதன் சிறப்புகள் என்ன? இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. கார் ஆர்வலர்கள் இந்த சின்னத்தை வைத்து அது என்ன தயாரிப்பு என்பதைக் கண்டுபிடித்திருப்பார்கள். உலக புகழ்பெற்ற அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தயாரிப்பே இது ஆகும். நிறுவனத்தின் ‘எக்ஸ்’ கார் மாடலே இது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுவே பெங்களூருவின் பிசியான சாலையில் சமீபத்தில் வலம் வந்திருக்கின்றது. வலம் வந்த அந்த கார் மாடல் துபாய் பதிவெண்ணைக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆகையால், இந்த கார் சிறப்பு அனுமதியின் வாயிலாக இந்தியா கொண்டு வரப்பட்டு இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது.
ஆனால், என்ன காரணங்களுக்காகக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், டெஸ்லா கார் ஆர்வலர்கள் மத்தியில் இந்த நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் ஆர்வலர்கள் பலருடைய மிகப் பெரிய எதிர்பார்ப்பாக டெஸ்லாவின் இந்திய வருகை உள்ளது.
இந்த நிறுவனத்தின் மின்சார கார்கள் அதிக ரேஞ்ஜைத் தரக் கூடியதாகவும், சிறப்பம்சங்களை வாரி வழங்கும் வசதிக் கொண்டதாகவும் காட்சியளிக்கின்றன. இதனால்தான் இந்தியர்கள் டெஸ்லாவின் இந்திய வருகையை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையிலேயே சில நாட்களாக டெஸ்லா நிறுவனம் விரைவில் அதன் கால் தடத்தை இந்தியாவில் பதிக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தமாதிரியான சூழலிலேயே டெஸ்லாவின் தயாரிப்பு ஒன்று சாலையில் வலம் வரும் படங்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், டெஸ்லா அதன் வருகையை முன்னிட்டு சோதனையோட்ட பணிகளைத் தொடங்கிவிட்டதோ என்கிற சந்தேகமும், எண்ணமும் கார் ஆர்வலர்கள் மத்தியில் எழும்பி இருக்கின்றது. மேலும், விரைவில் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரபோகிறதும் என்பது உறுதியாகி இருக்கின்றது.