இவ்ளோ கம்மியான விலையில் கவாஸாகி நிறுவனத்தின் பைக்கா! இப்பவே ஷோரூமுக்கு புறப்பட்ற வேண்டியதுதான்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று கவாஸாகி டபிள்யூ 175 (Kawasaki W 175). இந்த பைக்கில் 2 புதிய கலர் ஆப்ஷன்களை கவாஸாகி நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. அவை மெட்டாலிக் ஓஸன் ப்ளூ (Metallic Ocean Blue) மற்றும் கேண்டி பெரிஸ்மான் ரெட் (Candy Persimmon Red) ஆகியவை ஆகும்.
இதில், மெட்டாலிக் ஓஸன் ப்ளூ கலர் ஆப்ஷனின் விலை (Price) 1.31 லட்ச ரூபாய் ஆகவும், கேண்டி பெரிஸ்மான் ரெட் கலர் ஆப்ஷனின் விலை 1.24 லட்ச ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர எபோனி (Ebony) மற்றும் மெட்டாலிக் க்ராஃபைட் க்ரே (Metallic Graphite Grey) ஆகிய கலர் ஆப்ஷன்களில் இந்த பைக் தொடர்ந்து கிடைக்கும்.
இதில், எபோனி கலர் ஆப்ஷனின் விலை 1.22 லட்ச ரூபாய் ஆகவும், மெட்டாலிக் க்ராஃபைட் க்ரே கலர் ஆப்ஷனின் விலை 1.29 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இங்கே நாங்கள் கூறியுள்ள அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில் கவாஸாகி டபிள்யூ 175 பைக்கில், 177 சிசி, ஏர் கூல்டு, ஃப்யூயல் இன்ஜெக்டட் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 12.82 பிஹெச்பி பவர் மற்றும் 6,000 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கை பொறுத்தவரையில் முன் பகுதியில் 270 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியும் கவாஸாகி டபிள்யூ 175 பைக்கில் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்த பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மிமீ ஆக உள்ளது. இந்த பைக்கின் எரிபொருள் டேங்க் கொள்ளளவு 12 லிட்டர்கள் ஆகும். ஹாலோஜன் ஹெட்லேம்ப், வட்ட வடிவ டர்ன் இன்டிகேட்டர்கள், 17 இன்ச் வீல்கள் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய அம்சங்களையும் இந்த பைக் பெற்றுள்ளது.
இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், டபிள்யூ 175 ஸ்ட்ரீட் (W 175 Street) என்ற மாடலையும் கவாஸாகி நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது என்பதுதான். கவாஸாகி டபிள்யூ 175 மற்றும் கவாஸாகி டபிள்யூ 175 ஸ்ட்ரீட் ஆகிய 2 மாடல்களுக்கும் இடையே ஒரு சில வித்தியாசங்கள் மட்டுமே உள்ளன. கவாஸாகி டபிள்யூ 175 ஸ்ட்ரீட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 1.35 லட்ச ரூபாய் ஆகும்.