இந்த புது கவாஸாகி பைக்கை இதுக்காகவே வாங்கலாம்!! சுஸுகி, ஹோண்டாவுக்கு கையும் ஓடல… காலும் ஓடல!
கவாஸாகி (Kawasaki) நிறுவனம் 2024இல் இந்தியாவில் அதன் முதல் மோட்டார்சைக்கிளாக நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் -ஐ அறிமுகம் செய்துள்ளது. கவாஸாகி நிறுவனத்துக்கு மட்டுமில்லை, இந்தியாவிலேயே புதிய 2024ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த முதல் பைக்காக கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் விளங்குகிறது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.11.09 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கவாஸாகி பைக்குகளின் சிறப்பே அவற்றின் ஆற்றல்மிக்க என்ஜின்கள் தான். புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் பைக்கில் 636சிசி லிக்யுடு-கூல்டு இன்-லைன் 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் பல தரமான பைக்குகளை கடந்த காலங்களில் இருந்து வழங்கியுள்ளது. அவை என்னென்ன? அவற்றில் பலரை வெகுவாக கவர்ந்த பைக்குகள் எவை என்பதை கீழே உள்ள வீடியோவில் காணலாம்.
கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் பைக் முதல்முதலாக 1995ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, அப்போதில் இருந்து இந்த நிஞ்சா பைக் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. டிரையம்ப் டேடோனா 675ஆர், சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ் ஆர்600 மற்றும் ஹோண்டா சிபிஆர் 600ஆர் உள்ளிட்டவை விற்பனை செய்யக் கொண்டிருந்த சமயத்தில் அவற்றிற்கு போட்டியாக கவாஸாகி அறிமுகப்படுத்தியதே நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் ஆகும்.
புதிய நிஞ்சா இசட்.எக்ஸ்-6ஆர் பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், இதன் முன்பக்கத்தில் தலைக்கீழான முக்கோண வடிவில் ஒரு ஏர் இண்டேக் வழங்கப்பட்டுள்ளது. இது பைக்கின் ஏரோடைனாமிக்ஸில் முக்கிய பங்கு வகிக்கும். எல்இடி ஹெட்லைட்களும், அதற்கு கீழே இரு பக்கங்களில் எல்இடி இண்டிகேட்டர்களும் இந்த பைக்கின் முன்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.