இந்தியாவுக்கே முன் உதாரணமாக கேரளா கையில் எடுத்த திட்டம்!! இப்படி ஆகும்னு நெனைச்சே பார்க்கல!
ஏஐ கேமரா (AI Camera)-க்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிற்கே முன் உதாரணமாக பொருத்தப்பட்ட ஏஐ கேமராக்களை நீக்கும் முடிவில் ஒரு மாநில அரசாங்கம் உள்ளதாக அதிர்ச்சிக்கர தகவல் வெளியாகியுள்ளது. எந்த மாநில அரசாங்கம் அது? வாருங்கள் இந்த செய்தியில் இனி பார்க்கலாம்.
ஏஐ கேமராக்கள் குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல வெளிநாடுகளில், போக்குவரத்து காவலர்களின் பணிகளை ஏஐ கேமராக்கள் வெகுவாக குறைத்துள்ளன. இருப்பினும், நம் இந்தியாவில் டிராஃபிக்கில் இத்தகைய கேமராக்களை பயன்படுத்துவது மிகவும் குறைவாகவே உள்ளது.
டெல்லி, மும்பை போன்ற மிகவும் முக்கிய மாநகரங்களில் மட்டுமே சில பகுதிகளில் ஏஐ கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த வருடத்தில் கேரளா அரசு மொத்த இந்தியாவிற்கும் முன்னோடியாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்தை கண்காணிக்க ஏஐ கேமராக்களை பொருத்தியது. மொத்தம் 726 ஏஐ கேமராக்கள் பாதுகாப்பான கேரளா திட்டத்தின் ஒரு பகுதியாக பொருத்தப்பட்டன.
ரூ.232 கோடி செலவில் செயல்படுத்தப்பட்ட பாதுகாப்பான கேரளா திட்டத்தின் முக்கிய நோக்கம் உயிரிழப்புகள் மற்றும் விதிமீறல்கள் அற்ற சாலை போக்குவரத்தை கொண்டுவருவது ஆகும். ஒரு நல்ல விஷயத்திற்காக கொண்டுவரப்பட்டாலும், பொருத்தப்பட்ட பிறகு கேரளாவில் தினந்தோறும் ஏஐ கேமரா பற்றிய செய்திகள் இடம்பெற ஆரம்பித்தன.
ஏஐ கேமராக்கள் பற்றி நிறைய வதந்திகள் வெளிவந்தன. அவற்றுள் குறிப்பாக, ஏஐ கேமரா தவறாக அபராதம் விதித்துவிட்டது என்பதுதான் பலர் தெரிவித்த புகாராக இருந்தது. இந்த நிலையில் தற்போது, கேரளா அரசு ஏஐ கேமராக்களின் பயன்பாட்டை நிறுத்திக் கொள்ள உள்ளதாக ஓர் அதிர்ச்சிக்கர செய்தி வெளியாகி உள்ளது.