நாளுக்கு ஒன்னுனு அறிமுகம் செய்வாங்க போலையே.. நேத்து அறிமுகம் செய்ததைவிட கம்மி விலையில் புதிய பைக்!
உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கவாஸாகி ஆண்டின் தொடக்கத்தை சிறப்பிக்கும் விதமாக நேற்றைய தினம் (ஜனவரி 1) ஓர் தரமான இருசக்கர வாகன மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இரண்டு சக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அது 2024 கவாஸாகி நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக் மாடலையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
வருஷத்தின் முதல் நாளில் இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் கவாஸாகி நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையிலேயே தன்னுடைய இந்த வாக்குறுதியை அது நிறைவேற்றியது. இதைத்தொடர்ந்து, தற்போது சொல்லாத ஒன்றையும் அந்த நிறுவனம் செய்து காட்டி இருக்கின்றது.
நிஞ்சா இசட்எக்ஸ்-6ஆர் பைக்கைத் தொடர்ந்து அது தற்போது மற்றுமொரு தயாரிப்பையே புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. கவாஸாகி எலிமினேட்டர் பைக் மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 5 லட்சம் 62 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது ஓர் இரு துண்டுகளாக பிரிக்கப்பட்ட அமைப்புடைய இருக்கை ஆகும். இத்துடன், வட்ட வடிவ ஹெட்லேம்ப், கண்ணீர் துளி அமைப்பிலான ஃப்யூவல் டேங்க், மேகாஃபோன் எக்சாஸ்ட் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. எலிமினேட்டர் ஓர் 450 சிசி பைக் மாடலாகும்.
இதில் 451 சிசி பாரல்லல் ட்வின் வகை எஞ்சினே பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், டிரெல்லிஸ் ஃப்ரேம் பைக்கின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது அதிகபட்சமாக 44 பிஎச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் அசிஸ்ட் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.