எலெக்ட்ரிக் கார் வாங்க போறீங்களா? இத தெரிஞ்சுக்கோங்க முதல்ல..
சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வாகனங்களைப் பயன்படுத்த மக்கள் இப்போது அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் வாயிலாக குறைந்த செலவில் பயணங்களை மேற்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர். ஆனால் எல்லாவற்றிலும் இருக்கும் நன்மை தீமைகள் போல, மின்சார வாகனங்களிலும் சாதக பாதகங்கள் உண்டு என்பதை வாடிக்கையாளர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
அப்போது தான் தற்காலத்தில் டிரெண்ட் ஆகி வரும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உங்களுக்கு உகந்ததா என்பதை தெரிந்துகொள்ள முடியும். அந்த வகையில் மின்சார வாகனங்கள் வாங்கும் முன் கருத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.
விலை.. முதலில் நாம் பார்க்க வேண்டியது நம் பட்ஜெட்டை தான். மின்சார கார்கள் சந்தையில் அதிக விலையில் விற்பனைக்கு இருப்பதை உணர வேண்டும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற கார் இருந்தால் மட்டுமே அதை கவனத்தில் கொள்ள வேண்டும்.பட்ஜெட் வரம்பை மீறி மின்சார கார்களுக்கு செலவழிக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அது உங்கள் குடும்ப பட்ஜெட்டில் சிக்கலை ஏற்படுத்தும். எனவே, விலை உங்கள் வரம்பிற்குள் வருகிறதா என்பதை ஆராய்வது நல்லது
மைலேஜ்.. சாதாரண பெட்ரோல் அல்லது டீசல் கார்களை போன்று மின்சார கார்களில் அதிக தூரம் செல்ல முடியாது. சராசரியாக அதிக தூரம் பயணம் மேற்கொள்ளும் நபர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசலைப் போன்று எல்லா இடங்களிலும் வாகனத்தை ரீசார்ஜ் செய்வது தற்கால சூழலில் சாத்தியமற்றதாக இருப்பதை உணர வேண்டும். குறைந்த தூரம் பயணம் மேற்கொள்ளும் நபர்களுக்கு இந்த கார்கள் ஏற்றதாக இருக்கும்.