ரூ.5 லட்சம் டூ ரூ.2,200 கோடி… பிஸினஸில் சாதித்த அனில் குமார் கோயல்… ஊக்கம் தரும் வெற்றிக்கதை!
ஸ்டீல் வணிகக் குடும்பத்தைச் சேர்ந்த அனில் குமார் கோயல், 41 வயதில் பங்குச் சந்தையில் நுழை ந்தார். 5 லட்சத்தில் முதலீடு செய்யத் தொடங்கிய அனில் கோயலுக்கு இன்று ரூ. 2,200 கோடி சொத்து உள்ளதாக தெரிகிறது. அனில் கோயலுக்கு தற்போது 71 வயதாகிறது. சென்னை இன்வெஸ்ட்மென்ட் கிளப்பில் அவரது பெயர் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ.5 லட்சம் முதலீட்டில் இவ்வளவு பெரிய சொத்தையும் பெயரையும் சம்பாதித்த அனில் குமார் கோயலின் வெற்றிக் கதையை இங்கே பார்க்கலாம்.
அனில் கோயலின் குடும்பம் எஃகு எனும் ஸ்டீல் தொழில் செய்து வந்தது. அனில் கோயல் தனது 16வது வயதில் தன் தாத்தாவிடம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்கும் கலையை கற்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் இரும்பு வியாபாரமும் செய்து வந்தார். பின்னர் பங்குச் சந்தையில் நுழைந்தார். செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி, அனில் கோயல் வைத்திருக்கும் பங்குகளின் மதிப்பு சுமார் ரூ.2,117.5 கோடி ஆகும்.
பணம் ஈட்டுவதற்கான மூல மந்திரம்:
அனில் கோயல் கூறுவதாவது, நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.. பணத்தை முதலீடு செய்து காத்திருக்க வேண்டும்.. நிச்சயம் ஒரு நாள் நிலைமை மாறும், இதன் மூலம் பெரும் தொகையை சம்பாதிப்பீர்கள் என்கிறார். டிவிடெண்ட் வளர்ச்சியை வழங்கும் பங்குகளை விரும்புகிறார். ஈவுத்தொகை செலுத்தும் நிறுவனம், அடிப்படையில் வலுவானது என்று அனில் கோயல் நம்புகிறார்.
இது தவிர, அனில் கோயல், தான் ஒரு துறையில் உள்ள பல நிறுவனங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் முதலீடு செய்ய ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதாக கூறுகிறார். ஒரு பங்கு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படும்போது, அந்த நேரத்தில் பங்குச் சந்தை உயர்ந்தாலும் அது விற்கப்படுகிறது. மலிவான பங்குகளை வாங்க விலையுயர்ந்த பங்குகளை விற்பதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும்.