ஒரு கிராம் தங்கம் ரூ.7000 வரை அதிகரிக்கலாம்.. ஷாக் கொடுக்கும் 2024.. நிபுணர்கள் சொல்லும் நகை ரேட் கணிப்பு!

உலகளாவிய பொருளாதார நிலைமையின் நிச்சயமற்ற தன்மை மற்றும் புவிசார் பதட்டங்கள் காரணமாக எதிர்வரும் ஆண்டில்  10 கிராம் தங்கத்தின் விலை  ரூ.70,000 என்ற உச்சநிலையை எட்டக்கூடும் என்று அகில இந்திய ரத்தினங்கள் மற்றும் நகைஉள்நாட்டு உற்பத்தி கவுன்சில் (ஜிஜேசி) தெரிவித்துள்ளது. அதாவது  ஒருகிராம் ரூ7000 வரை வரலாம் என கணிக்கப்படுகிறது. இந்த போக்கு, தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும், பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு கருவியாகவும் (hedge against inflation) மாற்றியுள்ளது.

2023ல் சர்வதேச அளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது. இந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கி கடன் வட்டி விகிதங்களை அதிகரித்தன. இதன்காரணமாக, அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததால் இந்திய ரூபாய் உள்பட அனைத்து பெரிய நாடுகளின் நாணயங்களும் சரிவை சந்தித்தது. இந்த நிலையில் தான், தங்கம் விலைமதிப்பற்ற முதலீடாக மாறியுள்ளது.

இந்த போக்கு தொடருமானால், இந்த ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 70 ஆயிரம் வரை அதிகரிக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்து வருகின்றனர்.

உலகளாவிய வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்படவில்லை என்றால், தங்கத்தின் விலை யாராலும் கணிக்க முடியாத அளவு மேலும் அதிகரிக்கும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக, நடுத்தர வர்க்கத்தினர் தங்கத்தின் மீதான முதலீட்டை தங்களது வாய்ப்பாக கருதுகின்றனர்.

2023ல் தங்கத்தின் மீதான லாபப் பங்கு (Investment Returns) முறையே 13 சதவீதமாக இருந்தது. இது, மற்ற முதலீட்டு பொருட்களை விட அதிகமாகும். 2023ல் 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாய். 64,460 ஆக அதிகரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *