Gold Rate today | நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. 4 நாட்கள் தொடரும் அதே விலை.. இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன?
p2024ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் தங்கம் விலை இன்று தங்கம் விலை எந்த மாற்றமுமில்லாததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்த நிலையில் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் அதே விலையே நீடிக்கிறது.
அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஜனவரி 1ஆம் தேதி எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.5,910க்கும், ஒரு சவரன் ரூ.47280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.4,841க்கும், ஒரு சவரன் ரூ.38,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.