50 நாட்களில் 16 கிலோ எடையை குறைத்த ஆல்யா மானசா…அவரே சொன்ன சீக்ரெட் இதோ..!!
சீரியல் நடிகை ஆல்யா மானசா பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை எப்படி குறைத்தார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையின் நடிகையாக வலம் வருபவர் ஆலியா மானசா இவர் யானைராஜா என்ற தொடர் மூலம் அறிமுகமானார். இந்த தொடரில் தன்னுடன் நடித்த சஞ்சீவை 2019 ஆம் ஆண்டு திருமண செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு பெண் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. குழந்தை பிறப்பிற்கு பிறகு இவர் கொஞ்சம் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். தற்போது ஆல்யா, 50 நாட்களில் வியக்க வைக்கும் வகையில் 16 கிலோ எடையை குறைத்துள்ளார். அந்தவகையில், மானசா பிரசவத்திற்கு பிறகு உடல் எடையை எப்படி குறைத்தார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
பாக்சிங்: இவர் ட்ரெயினர் ஒருவரின் ஆலோசனை பெற்று அவருடன் சேர்ந்து ஒரு மாதம் தொடர்ந்து பாக்ஸிங் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
டான்ஸ்: இவர் தினமும் மாலை ஒரு மணி நேரம் டான்ஸ் பயிற்சி செய்வாராம். டான்ஸ் தான் இவரது மாலை நேர ஒர்க் அவுட் ஆகும்.
சீரக தண்ணீர்: ஆல்யா உடல் எடையை குறைப்பதற்காக, சீரகத்தை ஊற வைத்து அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் மூன்று லிட்டர் குடிப்பாராம்.
மூன்று மணி நேரம் வொர்க் அவுட்: காலை 6 மணி முதல் 9 மணி வரை எனினும் மூன்று மணி நேரம் வொர்க் அவுட் செய்வாராம். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவியது என்று கூறினார்.
தாய்ப்பால்: இவர் தனது இரண்டு குழந்தைகளுக்கும் தினமும் தவறாமல் தாய்ப்பால் கொடுப்பாராம். இதனால் எடை அதிகரிக்காமல் இருந்ததாம். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்வாராம்.