மாதம் ரூ.5000 வரை கிடைக்கும்…. மத்திய அரசின் இந்த ஓய்வூதிய திட்டம் பற்றி தெரியுமா?
அடல் ஓய்வூதியத் திட்டம் தனிநபர்கள் தங்கள் முதுமை காலத்தை வருவாயுடன் பாதுகாக்க அனுமதிக்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் 60 வயது முதல் இறப்பு வரை முதலீட்டின் அடிப்படையில் ரூ.1000 முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெறலாம்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (அடல் பென்ஷன் யோஜனா – ATAL PENSION YOJANA) முக்கிய அம்சங்கள்:
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் தனிநபர்கள் ஒரு சிறிய தொகையை தவறாமல் சேமித்து வந்தால், ஓய்வூதியம் பெற முடியும். நாள் ஒன்றுக்கு 7 ரூபாய் வரை பங்களிப்பதன் வாயிலாக, முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளில் மாதம் ரூ.1,000 முதல் 5,000 ரூபாய் வரை ஓய்வூதியத்தைப் பெறலாம்.
அடல் ஓய்வூதிய திட்டதில் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின்படி, தினசரி பங்களிப்பான 7 ரூபாயை 18 வயது முதல் தவறாமல் செலுத்தி வந்தால், 60 வயதைத் தாண்டிய பிறகு, மாதாந்திர ஓய்வூதியமாக 5,000 ரூபாயைப் பெறலாம். இதன் பொருள் 210 ரூபாய் மாதாந்திர முதலீடு, உங்கள் பொன்னான ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பை வழங்குகிறது. 42 ஆண்டுகளுக்கும் மேலாக குவிக்கப்படும் இந்த சேமிப்புத் தொகை என்பது மொத்தம் சுமார் 1,05,000 ரூபாயாக இருக்கும்.
அடல் ஓய்வூதிய திட்டத்தின் தகுதி மற்றும் நிபந்தனைகள்:
– 18 முதல் 40 வயதுக்கு உள்பட்ட எந்த இந்திய குடிமக்களும் இந்த திட்டத்தில் இணையலாம்.
– அக்டோபர் 2022 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு திருத்தத்தில் வருமான வரி செலுத்தும் தனிநபர்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாது என்று குறிப்பிடுகிறது.
– திட்டத்தில் இணைந்தவருக்கு மரணம் நிகழ்ந்தால், மனைவி அந்த ஓய்வூதியத்தை பெற தகுதியானவராகக் கருதப்படுவார்.
– இதற்கு சந்தாதாரர்கள் 60 வயதை அடையும் வரை தங்கள் சேமிப்பைத் தொடர வேண்டும்.