ஹிண்டன்பர்க் சர்ச்சை | உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கவுதம் அதானி வரவேற்பு: ‘வாய்மையே வெல்லும்’ எனக் கருத்து

புதுடெல்லி: அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்றும், செபி அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள கவுதம் அதானி, வாய்மையே வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம், உண்மை வென்றுவிட்டது. வாய்மையே வெல்லும். எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்துக்கான எங்களின் பணிவான பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்” என்று தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், இது மிகவும் உணர்வுப்பூர்வமான வழக்கு. ஆனால், ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி ஒரு வருடத்துக்கு மேல் ஆகியும் செபி இந்த வழக்கை முடிக்கவில்லை. தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இது போன்ற உணர்வுப்பூர்வமான ஒரு விஷயத்தில், விசாரணையை முடிக்க ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் என்றால், செபியின் அணுகுமுறை எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *