மார்கழி மாதத்தில் என்னென்ன காரியம் செய்யலாம், செய்யக் கூடாது தெரியுமா?
தமிழ் மார்கழி மாசம் அல்லது மார்கழி மாதம் பக்தி மற்றும் இசையின் மாதம் ஆகும். 2023 ஆம் ஆண்டில், மார்கழி மாதம் டிசம்பர் 17, 2023 வியாழன் அன்று தொடங்கி ஜனவரி 14, 2024 வியாழன் அன்று முடிவடைகிறது. இந்த மார்கழி மாசத்தின் முக்கியத்துவத்தை கிருஷ்ணர் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.
ஆன்மிக நடவடிக்கைகளுக்காக இம்மாதம் ஒதுக்கப்படுகிறது. சுப நிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் மாதத்தில் நடைபெறாது. சுப காரியங்களைத் தவிர்ப்பதற்குக் காரணம், இந்த மாதம் தேவர்களுக்கு விடியற்காலம் என்பதால், கடவுள் வழிபாட்டைத் தவிர வேறு எந்த சுப காரியங்களிலும் மக்கள் ஈடுபட விரும்புவதில்லை. இப்போது, மார்கழி மாதத்தில் எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று இங்கு தெரிந்து கொண்டு, அதனை நாம் பின்பற்றி நம் வாழ்வில் வளம் பெறலாம்…
மார்கழி மாதத்தில் செய்ய வேண்டியவை:
- பொதுவாகவே, மற்ற மாதங்களை விட இந்த மார்கழி மாதத்தில் ஆக்சிஜன் அதிகம் நிறைந்திருக்கும். எனவே, இம்மாதத்தில் அதிகாலையிலேயே எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாட வேண்டும் அல்லது கேட்க வேண்டும். அதுபோல் பஜனை பாடினால் புண்ணியம் கிடைக்கும்.
- மார்கழி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்காவிட்டாலும், திருமணத்திற்கு வரன் பார்ப்பது, ஜாதகம் பரிமாற்றம் செய்வது, கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்வது என இது போன்ற சுப காரியங்களைச் செய்யலாம்.
- புதிய நிலம், வீடு, மனை வாங்க முன் பணம் கொடுப்பது என இது போன்ற நல்ல விஷயங்கள் செய்யலாம்.
- முக்கியமாக, அதிகாலையிலேயே எழுந்து அரிசி மாவினால் வீட்டு முன் கோலம் போட வேண்டும்.
மார்கழியில் செய்யக்கூடாதவை:
- மார்கழி மாதத்தில் திருமணம் செய்யக் கூடாது.
- அதுபோல் மார்கழி மாதத்தில் புதுமனை குடிபுகுதல், வாடகை அல்லது ஒத்திக்கு வீடு மாறுதல், புதிய அலுவலக கட்டடத்திற்கு மாறுதல் போன்றவை செய்ய கூடாது. காரணி, இம்மாதத்தில் துரியோதனன் தனது ராஜ்ஜியத்தை இழந்தார் என்று கூறப்படுகிறது.
- மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆக்சிஜன் அதிகமாக இருப்பதால், சூரிய உதயத்திற்குப் பின் தூங்கக் கூடாது. அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும் என்று
- முன்னோர்கள் கூறுகின்றனர்.
- இம்மாதத்தில், திருமணம், நிச்சயதார்த்தம், காது குத்துதல் செய்ய கூடாது. அதுபோல், புதிய வீட்டிற்கான பத்திரப் பதிவு, வாகனப் பதிவு செய்தல் மற்றும் வாங்குதல் கூடாது.