பெருங்களத்தூர் அருகே சாலையில் சுற்றித் திரிந்த குட்டி முதலை- வைரல் வீடியோ

நகரின் புறநகர்ப் பகுதிகள் பெரும்பாலும் ஈரநிலங்களாக இருப்பதாகவும், வெள்ளப்பெருக்கு காரணமாக இதுபோன்ற முதலைகள் ஏரிகளில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் ஒன்றரை அடி நிளமுள்ள சிறிய முதலை ஒன்று சாலையில் சுற்றித் திரியும் வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மாலையில் முதலையை பார்த்த வனத்துறையினர் இரவு 10 மணியளவில் அதை பிடித்தனர். இது கிண்டி தேசிய பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு கடந்த வாரம் பிடிபட்ட முதலையும் வைக்கப்பட்டுள்ளது, என்று நகரின் வனவிலங்கு காப்பாளர் பிரசாந்த் கூறினார்.

இது சதுப்பு நிலப் பகுதிகளில் காணப்படும் மக்கர் இன முதலை (mugger-breed) என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெருங்களத்தூரில் காணப்பட்ட ஐந்தாவது முதலை இதுஅங்குள்ள ஏரிகளில் வாழலாம். இது புதிதாகப் பிறந்த முதலை. இந்த இனம் மிகவும் தகவமைக்கக்கூடியவை, என்று பிரசாந்த் கூறினார்.

முன்னதாக, மிக்ஜாம் புயலுக்கு பிறகு பெருங்களத்தூர் ஏரியிலிருந்து ஏழு அடி நீளமுள்ள மக்கர் முதலை வெளியேறி சாலையில் சுற்றி வந்தது. அது தானாகவே ஏரிக்கு திரும்பினாலும், ஒரு வாரம் கழித்து மீண்டும் முதலை  வெளியில் வந்தது, பிறகு அது பிடிக்கப்பட்டு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

நகரின் புறநகர்ப் பகுதிகள் பெரும்பாலும் ஈரநிலங்களாக இருப்பதாகவும், வெள்ளப்பெருக்கு காரணமாக இதுபோன்ற முதலைகள் ஏரிகளில் இருந்து வெளியேறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவை கூச்ச சுபாமுள்ள இனங்கள், அவை மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது, என்று அதிகாரிகள் கூறினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *