உறைப்பனிக்கு மத்தியில் கட்டப்படும் இக்லு மட்டும் கதகதப்பாக இருப்பது எப்படி? ஆச்சரிய தகவல்

இந்த உலகம் வியக்கத்தக்க பல விஷ்யங்களை உள்ளடக்கியது. காடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், உயிரினங்கள் என ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை. அறிவியல் ஒரு புறம் இருக்க இவை அனைத்தும் ஆச்சிரியத்தை தூண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை

இத்தகைய அதிசயங்களில் ஒன்று தான் இக்லு எனப்படும் பனி வீடு. பனிப்பிரதேசங்களில் வாழும் மக்கள் உறைப்பனியில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பனியால் கூடாரம் அமைத்து அதில் வசிப்பர். நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா பனியால் உருவாக்கப்பட்ட கூடாரம் எப்படி கதகதப்பை தருகிறது.

உன்மையாகவே இது அறிவியலின் அதிசயம் தான். பனியால் கட்டப்பட்ட கூடாரம் எப்படி கதகதப்பை தரும் என்று கேள்வி எழாமல் இருக்காது. அதற்கு ஒரு அறிவியல் காரணம் உண்டு. பொதுவாக இக்லு நன்கு அழுத்தி நெருக்கப்பட்ட பனி  துகள்களால் கூரை வடிவில் கட்டப்படும். கூடாரத்தில் இருக்கும் உரைப்பனி மின்சார ஓட்டத்தை தடுத்து நிறுத்தும்.

இதன் மூலம் 95% காற்று உரைப்பனிக்குள் சிக்கிக்கொள்ளும். இந்த சூழலில் உடலின் கதகதப்போ, மெழுகு வர்த்தியின் வெப்பமும் கூட கூடாரத்தை கதகதப்பாக வைத்துக்கொள்ளும்.

மைனஸ் 40 டிகிரியில் கட்டபடும் பனி வீட்டிற்குள் சுமார் 11-12 டிகிரி வெப்பம் இருக்கும் என்றால் அது தவறு. மைனஸ் 40 கிடிரில் கட்டபடும் இக்லுவிற்குள் ஜீரோ டிகிரி வெப்பம் இருக்கும். பொதுவாக மைனஸ் 40 டிகிரியில் கண்கள், மூக்கு, காது உள்ளிட்ட உருப்புகள் பனியால் உறைந்துவிடும். ஆனால் ஜீரோ டிகிரி வெப்பநிலையில் அந்த கவலையில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *