மறைந்திருக்கும் 3 விலங்குகளை கண்டுபிடிக்க உங்களுக்கு 9 வினாடிகள்தான் டைம்! ரெடியா?
இன்டர்நெட்டை பயன்படுத்தும் மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த சோஷியல் மீடியாக்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பயன்படுத்துகிறார்கள். ஒரே இடத்தில் அமர்ந்து ஓய்வில் இருந்தாலும் கூட பலர் தங்கள் தங்கள் மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்க ஆன்லைன் மூலம் மைன்ட் ஆக்ட்டிவிட்டீஸ்களில் ஈடுபடுகிறார்கள்.
அந்த வகையில் மைன்ட் ஆக்ட்டிவிட்டீஸ்களில் ஆர்வம் காட்டும் நெட்டிசன்கள் மத்தியில் நம் கண்களை குழப்பி மூளைக்கு வேலை கொடுக்க கூடிய பிரபல ஆன்லைன் புதிர் விளையாட்டாக இருக்கும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள்தான் மிக பிரபலமாக இருக்கின்றன. ஒருவர் தான் எந்தளவிற்கு அறிவுக்கூர்மை, பார்வை கூர்மை, சிந்திக்கும் திறன் மற்றும் கவனிக்கும் திறனுடன் இருக்கிறோம் என்பதை அவரே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மிகவும் உதவியாக இருக்கின்றன.
இவை தவிர உங்களை பற்றி, உங்கள் ஆளுமையைப் பற்றி, உங்கள் குணாதிசயங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டுமா? அதற்கும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் உதவுகின்றன. பலஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் ஜாலியாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருந்தாலும் கிரியேட்டிவிட்டி மிக்கவை மற்றும் உள்ளர்த்தம் பொதிந்தவையாக இருக்கின்றன. எனவே ஆப்டிகல் இல்யூஷன்கள் நம்முடைய சுய திறன்களை வளர்த்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் தான் குழந்தைகள். சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் ஈர்க்க கூடிய ஆன்லைன் புதிர் விளையாட்டாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இருக்கின்றன.
இப்போது இங்கே நாம் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜானது உங்களின் பார்வை கூர்மை மற்றும் கவனிக்கும் திறனுக்கு சவால் விட கூடியது. இப்போது கீழே நீங்கள் பார்க்க போகும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் விலங்குகளை கொண்டிருக்கும். சட்டென்று பார்ப்பதற்கு ஒரு விலங்கு மட்டும் தான் அதில் இருக்கிறது என்று நம்மை நினைக்க வைத்தாலும், கூர்ந்து பார்த்தால் அதில் 3 விலங்குகள் இருக்கும். கீழ்காணும் ஆப்டிகல் இல்யூஷன் இமேஜில் மறைந்திருக்கும் மூன்று விலங்குகளைக் கண்டறிய உங்களது கூர்ந்து கவனிக்கும் திறன் மற்றும் பார்வை திறனை பயன்படுத்த வேண்டும். பார்த்த வேகத்தில் ஒன்பதே வினாடிகளுக்குள் அந்த 3 விலங்குகளையும் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே உங்களுக்கான சவால்