கார் டயர், மின் கம்பங்களில் நாய்கள் சிறுநீர் கழிப்பது ஏன்? அதற்கு முக்கிய காரணம் இருக்கு!!
கார் டயர், மின் கம்பங்கள் உள்ளிட்டவற்றில் நாய்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்திருப்போம்
நாய்கள் ஏன் இப்படி செய்கின்றன என்று யாராவது யோசித்திருப்போமா? அப்படியே யோசித்திருந்தாலும் அவர்கள் கொஞ்சபேர் தான் இருப்பார்கள்.
மேலோட்டமாக பார்க்கும்போது நாய்கள் சேட்டைக்காக, வேடிக்கை செய்வதற்காக கார் டயர், மின் கம்பங்களில் சிறுநீர் கழிப்பது போல் தோன்றும்.
ஆனால் நாய்கள் இப்படி தொடர்ச்சியாக செய்வதற்கு முக்கிய காரணம் உள்ளது.
மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசுவதன் மூலம் தொடர்பு கொள்கிறார்கள். விலங்குகள் தொடர்பு கொள்ளும் முறை ஒவ்வொரு இனத்திற்கும் மாறுபடும்.
நாய்கள் மின் கம்பம், கார் டயர்களில் சிறுநீர் கழிப்பதன் மூலம் தான் இந்த இடத்தில் இருப்பிடத்தை மற்ற நாய்களுக்கு குறிப்பால் உணர்த்துகின்றன.
சம்பந்தப்பட்ட நாயின் தோழர்கள் அதன் சிறுநீர் வாசனையை வைத்து அதனை அடையாளம் கண்டுகொள்வார்கள்.
தரையில் நாய்கள் சிறுநீர் கழிக்கும்போது அதன் வாசனை சற்று நேரத்தில் காற்றுடன் கலந்து விடும். இதனால் ஒருநாயால் மற்றொன்றை தொடர்பு கொள்வது முடியாமல் போகும்.
தகவல் பரிமாற்றம் என்ற முக்கிய காரணத்திற்காகத்தான், சிறுநீர் எளிதில் உலர்ந்து போகாத பொருட்களின் மீது சிறுநீர் கழிக்கின்றன.