காஸா பள்ளிக்குள் குழந்தைகளுக்கு ஏற்ற துப்பாக்கிகள்: இஸ்ரேல்

காஸாவில் உள்ள ஒரு பள்ளிக்குள் சுரங்கம் ஒன்றை இஸ்ரேல் வீரர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த சுரங்கத்திற்குள் குழந்தைகளுக்கு ஏற்ற ஆயுதங்களின் புகைப்படங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவின் தெற்குப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட ராணுவ வீரர்களால் இந்த சுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவக் குழு வெளியிட்ட புகைப்படத்தில் பள்ளிக்குள் மோட்டார்கள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள் இருப்பது காட்டப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் மறைவான கண்காணிப்பு முகாம்களையும் ராணுவ வீரர்கள் சோதனையிட்டனர். ஹமாஸ் போராளிகள் அந்த இடங்களில் இருந்துதான் ராணுவ பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவத்தை கண்காணிப்பதற்காக ஹமாஸ் அமைப்பினர் உபயோகித்த டிரோன்களையும் அழித்ததாகத் தெரிவித்துள்ளனர்.