‘டெஸ்ட் கிரிக்கெட்டை பாதுகாக்க வேண்டியது நமது கடமை’: ரோகித் கூற காரணம் என்ன?

“டெஸ்ட் கிரிக்கெட் என்பது நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டிய ஒன்று. இது ஒன்று அல்லது இரண்டு நாடுகளின் பொறுப்பு மட்டுமல்ல.” என்று கேப்டன் ரோகித் கூறினார்.

Rohit Sharma: இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரைப் போல் தென் ஆப்பிரிக்காவில் எஸ்.ஏ-20 லீக் விளையாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் ஐடன் மார்க்ராம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், 2024ம் ஆண்டுக்கான தொடர் வருகிற 10ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க (சி.எஸ்.ஏ) கிரிக்கெட் வாரியம் அதன் சிறந்த வீரர்கள் எஸ்.ஏ-20 லீக் தொடரில் பங்கேற்பதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. இதனால், அடுத்த மாதம் தொடங்கும் நியூசிலாந்திற்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அனுபவமற்ற 2-ம் தர வீரர்களைக் கொண்ட அணியை களமிறக்குகிறது.

பிப்ரவரி தொடக்கத்தில் தொடங்கும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 14 பேர் கொண்ட அணியை தென் ஆப்ரிக்க வாரியம் கடந்த வாரத்தில் அறிவித்தது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள 7 வீரர்கள் இதுவரை தென் ஆப்ரிக்க அணிக்காக விளையாடாத அறிமுக வீரர்கள் (அன்-கேப்டு வீரர்கள்). மேலும் பாக்சிங் டே டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய அணியில் உள்ள டேவிட் பெடிங்ஹாம் மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகிய இரண்டு வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் எஸ்.ஏ-20 லீக்கில் விளையாட உள்ளனர். இது கிரிக்கெட் உலகில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

கேப்டன் ரோகித் கருத்து 

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரோகித் கேப்டவுனில் இன்று (புதன்கிழமை) தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், “என்னைப் பொறுத்தவரை, டெஸ்ட் இறுதி சவாலாக உள்ளது. மேலும் அந்த வடிவத்தில் சிறந்த வீரர்கள் விளையாடுவதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். ஆனால் ஒவ்வொருவருக்கும் சொந்த பிரச்சனைகளை சமாளிக்கவும், அதற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தென் ஆப்ரிக்கா அதன் மூத்த வீரர்களை தேர்வு செய்யாததற்கு எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் விளையாடுவதை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்கள். ஆனால் நான் சொன்னது போல் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியத்தில் உள்ள விவாதங்கள் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனது பார்வையில், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இது நீங்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் ஒரு சவால், ”என்று கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *