பணக்காரனா ஆகனும்னு ஆசை வந்துடுச்சா.. ரொம்ப தவறான முடிவு.. ஷாகின் ஆப்ரிடி மீது வசீம் அக்ரம் தாக்கு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடி பங்கேற்காமல் ஓய்வில் இருப்பதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் அக்ரம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான அணி ஏற்கனவே இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி விட்டது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் இந்த தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான அணி அங்கு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரில் சாகின் அப்ரிடி தான் கேப்டன் என்பதால் அவர் மூன்றாவது டெஸ்டில் பங்கேற்காமல் ஓய்வு எடுத்து விட்டார். இந்த நிலையில் இதற்கு கடும் கண்டனத்தை முன்னாள் கேப்டன் வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ஷாகின் அப்ரிடிக்கு ஓய்வு முடிவு வழங்கியதில் அணி நிர்வாகத்தில் தலையீடு எதுவும் இல்லை.
இது முற்றிலும் ஷாகின் எடுத்த முடிவுதான். கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஜாம்பவானாக நீங்கள் வரவேண்டுமா இல்லை வெறும் பணக்காரனாக இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.இந்த தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்துக்கு சென்று ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறீர்கள். அதில் ஷாகின் ஆப்ரிடி தான் கேப்டன். ஆனால் டி20 கிரிக்கெட் காக டெஸ்ட் போட்டி விடுவீர்களா?
டி20 போட்டியில் சிறப்பாக விளையாடினால் யார் தான் அதனை கவனிக்கிறார்கள். நிச்சயம் டி20 போட்டி பொழுதுபோக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியும் .ஆனால் டி20 அதிக அளவில் விளையாடுவதன் மூலம் கிரிக்கெட் வாரியங்கள் பணம் சம்பாதிக்கின்றனர். இதைப்போல் வீரர்களுக்கும் பணம் கிடைக்கிறது. ஆனால் கிரிக்கெட் வீரர்கள் ஒன்றை மட்டும் நன்றாக புரிந்து கொள்ளுங்கள். டெஸ்ட் கிரிக்கெட் தான் இருப்பதிலேயே மிகவும் சிறந்தது.
சிட்னி டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்தது என்று கேட்டால் அனைவரும் சொல்வார்கள். ஆனால் நேற்று இரவு டி20 கிரிக்கெட் என்ன நடந்தது என்று கேளுங்கள். யாருக்கும் எதுவும் தெரியாது, அதுதான் வித்தியாசம். இதனை கிரிக்கெட் வீரர்கள் புரிந்து கொண்டு விளையாட வேண்டும். நீங்கள் கிரிக்கெட்டின் மிகப்பெரிய வீரராக வரவேண்டும் என்றால் நீங்கள் டெஸ்ட் போட்டியில் தான் கவனம் செலுத்த வேண்டும்.
பணக்காரனாகவும் மாறலாம் பெரிய கிரிக்கெட் வீரனாகவும் மாறலாம். அதற்கு கொஞ்சம் புத்திசாலித்தனத்துடன் விளையாட வேண்டும் என்று ஷாகின் ஆப்ரிடி கூறியுள்ளார். ஷாகின் ஆப்ரிடி இந்த முடிவு தமக்கு அதிர்ச்சியை அளித்ததாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிசும் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.