மணிரத்னம் பட ஹீரோயினுடன் லிவிங் டுகதரில் இருக்கும் சித்தார்த்.. இன்ஸ்ட்டாவில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர், பாடகர், ஸ்கிரிப்ட் ரைட்டர், நடிகர் என பன்முகத் திறமைகளை உள்ளடக்கிய சித்தார்த் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
தமிழ் தெலுங்கு ஹிந்தி என போன்ற மொழிகளில் முதன்மை நடிகராகவும் முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் எந்தவித ஈகோவும் இல்லாமல் பழகும் சித்தார்த் சமூக பிரச்சனைகளையும் கையாண்டு சர்ச்சைகளில் சிக்கி உள்ள கதை நாடறியும்.
எதற்கும் அஞ்சாத இந்த முரட்டு சிங்கம் சிங்கிளாகவே இருந்து வருகிறது. சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்து பல வருடங்கள் ஆகியும் இன்றும் இளமை தோற்றத்துடன் வலம் வரும் சித்தார்த்திற்கு சமீபத்தில் வெளிவந்த சித்தா திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களோடு புகழையும் அள்ளித் தந்தது எனலாம்.
கமலுடன் இந்தியன் 2, மாதவன் மற்றும் நயன்தாராவுடன் டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார் சித்தார்த். அயலான் படத்திற்காக ஏலியனுக்கு பின்னணி குரல் கொடுத்து முடித்த கையோடு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிநாட்டுக்கு பயணம் பண்ணி உள்ளார் சித்தார்த்.
சிங்கிளாக இருக்கும் சித்தார்த் ஒரு சிங்கிள் உடன் சிங்க் ஆகி அந்த புகைப்படத்தை வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். அந்த சிங்கிள் வேறு யாரும் அல்ல, மணிரத்தினத்தின் காற்று வெளியிடை பட நாயகி அதிதி ராவ் அவர்கள் தான்.
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் மகாசமுத்திரம் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்தனர் இருவரும் தங்கள் காதலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஒன்றாக இணைந்து விருதுகள், விழாக்கள் ஆகியவற்றிற்கு பயணப்பட்டுக் கொண்டிருந்ததை ரசிகர்கள் கவனிக்க தவறியதில்லை.
இந்நிலையில் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தை அவரவர் இன்ஸ்ட்டாவில் ஒன்றாக பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி தங்களது உறவை உறுதிப்படுத்தி உள்ளனர். அதிதி ராவுக்கு ஏற்கனவே சத்யதீப்மிஸ்ரா உடன் திருமணம் நடந்து விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.