புடினைப்போலவே தோற்றமளிக்கும் மூன்றுபேர்… விரைவில் கொல்லப்படலாம் என உக்ரைன் தகவல்
புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புடினைப்போலவே காணப்படும் மூன்றுபேர்…
ஏற்கனவே புடின் இறந்துவிட்டதாகவும், புடினுக்கு பதிலாக, அவரைப்போல் தோற்றமளிக்கும் ஒருவர்தான் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusovம், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, புத்தாண்டையொட்டி தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புடின் உண்மையில் புடின் இல்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட தோற்றம் என்றும் பலர் கூறியுள்ளனர்.
புடினுடைய கழுத்து அவருடைய உடலுடன் பொருந்தாதது போல் காட்சியளித்ததாக அந்த உரையைக் கேட்டவர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
விரைவில் கொல்லப்படலாம்
இந்நிலையில், புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேரும் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளரான Andriy Yusov தெரிவித்துள்ளார்.