புது வருஷம் இந்த 6 ராசிக்காரர்களுக்கும் உச்சம்… வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க!
இந்த புத்தாண்டில், இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உச்சம். அதை முறையா பயன்படுத்திக்கோங்க. அதே சமயம், ஒரு நிமிஷம் …
இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு என்பது உங்கள் கைகளில் வந்து தவழாது. அதிர்ஷ்டம் உங்கள் எதிரில் இருக்கும்… அல்லது அருகிலேயே கூட இருக்கும். நீங்கள் தான் அதனருகில் செல்ல வேண்டும். ஜோதிடத்திலும், ராசிபலன்களிலும் அதிர்ஷ்டம் என சொன்னாங்க. ஆன வரலைன்னு புலம்பாதீங்க. அதிர்ஷ்டத்திற்கான நேர்மையான உழைப்பு உங்களிடம் இருந்தால் இந்த வருஷம் நீங்க தான் டாப்பு. இனி உங்க வாக்கு பலிதமாகும். கில்லியாக சொல்லி அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம் வாங்க.
துலாம்:
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் யோகம், கொண்டாட்டம் தான். இந்த புத்தாண்டில் குருபகவான் சுபபலன்களை வாரி வழங்க தயாராக இருக்கிறார். தொட்டதெல்லாம் பொன்னாகும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். பணியில் பதவி உயர்வு , பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். மந்தநிலை மறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே 2024ம் ஆண்டு உங்களுக்கு பொற்காலம் தான். தொழிலில் தாறுமாறான லாபம் கிட்டும். பணம் பல வழிகளில் வந்து சேரும். கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். இழுபறியில் இருந்த பல விஷயங்கள் சுபபலன்களை அள்ளித் தரும். உற்சாகம் பெருகும்.
தனுசு:
தனுசு ராசி நேயர்களே 2024 ம் ஆண்டில் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. சோதனைகளை கடந்து வந்த நீங்கள் சாதனைகளுக்கு சொந்தக்காரராகப் போகிறீர்கள். பணியிடத்தில் சவால் இருந்த போதிலும் குருபார்வையால்எதையும் சமாளிக்கும் வல்லமை கிட்டு. அதிகமாக உழைக்க தயாரானால் விரைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம். வெளிநாட்டு யோகம் கிட்டும்.