ஹமாஸை கேட்ட இஸ்ரேலும்.. பொட்டம்மானை கேட்ட இந்தியாவும்
ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்கு பழிவாங்குவதாக கூறிக்கொண்டு காசாவை முழுவதுமாக அழித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வருகின்ற கண்மூடித்தனமான தாக்குதல்களால் இதுவரையில் சுமார் 22000 பேர் வரையில் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காசாவில் இஸ்ரேலிய படைகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்ற ஹமாஸை காசாவை விட்டு வெளியேறும் படியான சாத்தியமே இல்லாத கோரிக்கையை எப்படி இஸ்ரேலால் விடுக்க முடிந்தது.
இந்த கேள்விகளுக்கான பதிலை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஈழ யுத்தத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் தேடுவது பொருத்தமானது.
மேலும், குறித்த சம்பவங்களை தொடர்பில் விளக்கமாக மற்றும் விரிவாக எடுத்துக் கூறுகிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி..