8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான உலகத்தில் மிகப்பழமையான சிவன் கோவில்..!

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரகோசமங்கையில் அமைந்துள்ள மங்களநாதர் சுவாமி திருக்கோவில், உலகின் பழமையான சிவன் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

உலகிலேயே முதல் நடராசர் தோன்றிய ஊர், உலகின் உள்ள அனைத்து ரிசிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில் என பல்வேறு சிறப்புகளை இந்த இக்கோயில் குறித்து இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்..

இந்தக் கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் என்று கருதப்படுகிறது. இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக்குலுங்குகிறது.

இங்குதான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்கு

சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகசுவர இலிங்கம் உருவாக்கிய ஆலயம்.

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற வாக்கியம் உருவான இடம். மரகத நடராசர் சிலை உள்ள ஆலயம்.
இப்படி பல அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.

இந்த கோவிலை பற்றிய சிறப்பு தகவல்கள் :

உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும். திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்’ இத்தலத்தில்தான் நடந்தது.

உத்தரகோச மங்கை கோவிலில்முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை அவர்களது தலைநகராக இருந்தது. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,’தெட்சிண கைலாயம்’, சதுர்வேதி மங்கலம்,

இலந்திகைப் பள்ளி, பத்ரிகா சேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *