விஜயகாந்த் மறைவு.. அஜித் போன் பண்ணியே பேசல!.. அதெல்லாம் சுத்த பொய்.. உண்மையை போட்டு உடைத்த பிரபலம்!..
விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் அஜித் குமார் அஞ்சலி செலுத்தாமல் புத்தாண்டை முன்னிட்டு துபாயில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார் என வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், நடிகர் அஜித் பிரேமலதாவிடம் போன் பண்ணியே பேசவில்லை என்றும் குறுஞ்செய்தி கூட அனுப்பலை என்கிற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவுக்கும் சினிமா நடிகர்களுக்கும் பல நல்ல விஷயங்களை செய்து கேப்டன் என அனைவராலும் பாராட்டப்பட்டவர் விஜயகாந்த். கடந்த டிசம்பர் 28ம் தேதி நோய் பாதிப்பு காரணமாக அவர் காலமானார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் தங்கள் ஷூட்டிங் வேலைகளை எல்லாம் தூக்கிப் போட்டு விட்டு விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேரில் வந்து கலந்து கொண்டனர்.
ஆனால், நடிகர் அஜித் இன்னமும் துபாயில் ஷூட்டிங் கூட செல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம், தனது மகள் அனோஷ்காவின் பிறந்தநாள் கொண்டாட்டம் என ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவர் பிரேமலதா விஜயகாந்துக்கு போன் பண்ணி எல்லாம் பேசவில்லை என்றும் ஒரு குறுஞ்செய்தியை அவரது பி.ஆர்.ஓவுக்கு அனுப்பியதாகவும், அதனை அவர் பிரேமலதாவுக்கு மட்டும் ஃபார்வேர்ட் செய்ததாகவும் சொன்ன தகவல் தான் வெளியானதே தவிர, பிஆர்ஓ சொன்னதே பொய்யான தகவல் தான் என்றும் அஜித்திடமே அவர் பேசவில்லை அவர் எப்படி மெசேஜ் அனுப்பியிருப்பார். அப்படி அனுப்பியிருந்தால் அந்த ஆதாரத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு தம்பட்டம் அடித்திருப்பார்களே என அந்தணன் போட்டு உடைத்து இருக்கிறார்.