விஜயகாந்துக்கு வராமல் நியூ இயர் பார்ட்டியில் குத்து டேன்ஸ்!.. அஜித்தை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்…
Ajith kumar: கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் விஜயகாந்த் பற்றிய செய்திகள்தான் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஏனெனில், அவரின் மரணம் எல்லோருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் வெறும் நடிகராக மட்டும் இருந்திருந்தால் இவ்வளவு பேர் அவருக்காக துடித்திருக்க மாட்டார்கள்.
நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதராகவும், மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவராகவும், பசியோடு இருப்பவருக்கு உணவளிக்கும் இரக்க குணம் கொண்டவராகவும் அவர் இருந்ததால்தான் அவரின் மறைவுக்கு பலரும் வருத்தப்பட்டு கண்ணீர் விட்டனர். ஒரு நடிகராகவும், நல்ல மனிதராகவும், நடிகர் சங்க தலைவராகவும் விஜயகாந்த் சினிமாவுக்கு செய்தது ஏராளம்.
ஆனால், அவரின் மறைவில் வெறும் 20 சதவீத நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நடிகர் சங்க தலைவராக இருந்தவருக்கு நடிகர் சங்கமே அவரின் மறைவுக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை என பேச துவங்கிவிட்டனர். ரஜினி, கமல், விஜய், அர்ஜூன், மன்சூர் அலிகான், சத்தியராஜ் என மிகவும் குறைவான நடிகர்கள் மட்டுமே அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
அஜித், சூர்யா, விஷால், கார்த்தி, தனுஷ், சிம்பு ஆகியோர் வெளிநாட்டில் புது வருடத்தை கொண்டாடி கொண்டிருந்தார்கள். இதுதான் இப்போது சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. பொதுவாக நடிகர் அஜித் எதிலும் கலந்து கொள்ளமாட்டார். அவர் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிக்கே அவர் வரமாட்டார்.
எனவே, விஜயகாந்தின் மறைவுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. நினைத்தது போலவே அவர் வரவில்லை. ஆனால், துபாயில் ஜாலியாக புது வருடத்தை அவர் கொண்டாடினார். புதுவருட பார்ட்டியில் அவர் நடனமாடி வீடியோவை சிலர் இணையத்தில் பகிர்ந்து ‘இதுக்கெல்லாம் நேரம் இருக்கு.. விஜயகாந்துக்கு வர அஜித்துக்கு மனமும், நேரமும் இல்லையா?’ என பதிவிட்டு வருகிறார்கள்.
ஆனால், அது அவரின் விருப்பம். விஜயகாந்த் இறந்துவிட்டார் என்பதற்காக அவர் புது வருடத்தை கொண்டாடாமல் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் மறைவுக்கு வருத்தம் தெரிவித்து பிரேமலதாவின் செல்போன் எண்ணுக்கு அஜித் வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினார் என வெளியான செய்தி உண்மையா? இல்லையா? என்பதும் தெரியவில்லை.