பணப்பொட்டியை தூக்கி ஓடிட்டாரு போல! வெளியான பிக்பாஸ் ப்ரோமோ வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி
Biggboss Season 7: ஒவ்வொரு நாளும் ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்து வைத்துக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. விதவிதமான டாஸ்க்குகளுடன் புதுமையான முயற்சிகளுடன் களம் இறங்கியது இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன்.
கிட்டத்தட்ட 90 நாள்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த பிக்பாஸ் வீட்டில் பூர்ணிமா, மாயா, விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, மணி, விஷ்ணு, விஜய் வர்மா உட்பட 8 பேர் இருக்கிறார்கள். இந்த வாரம் கண்டிப்பாக ஒரு எலிமினேஷன் இருக்க அதற்கு முன்பாக அந்த பணப்பெட்டி டாஸ்க்கும் நடந்து வருகிறது.
ஆரம்பத்தில் அந்த பெட்டியில் வெறும் 1 லட்சமாகத்தான் இருந்தது. யாரும் எடுக்காத நிலையில் அந்த தொகை 5 லட்சமாக உயர்ந்தது. இன்று வரை அந்த பணப்பெட்டியை யாரும் தூக்குவதாக இல்லை. அதனால் மீண்டும் அந்த தொகை 9 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இன்னும் அந்தப் பெட்டியை எடுக்க தவறினால் ஒரு வேளை தொகை குறையலாம் இல்லை கூடவும் செய்யலாம் என்று கூற தினேஷ் யாரும் எடுக்க மாட்டார்கள் என்று கமெண்ட் அடித்தார்.
இந்த நிலையில் கடைசியாக வெளியான ப்ரோமோ வீடியால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதாவது மாயா இந்த வீட்டில் இன்விஸிபிளாக இருக்க மற்ற போட்டியாளர்களை என்ன வேண்டுமானாலும் மாயா செய்யலாம் என்பதுதான் டாஸ்க்.
இந்த டாஸ்க்கை பற்றி படிக்கும் போது அர்ச்சனாதான் படித்தார். ஆனால் முன் இருக்கையில் மற்ற போட்டியாளர்கள் இருக்க தினேஷ் மட்டும் காணவில்லை. வெளியான ப்ரோமோ வீடியோ முழுவதிலும் தினேஷை பார்க்க முடியவில்லை. அதனால் ஒரு வேளை தினேஷ்தான் அந்த பணப்பெட்டியை தூக்கி விட்டாரோ என்று ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.
ஏனெனில் ஒரு டஃப் போட்டியாளராக தினேஷ் வந்து கொண்டிருக்க டைட்டில் வின்னரை ஜெயிக்கவும் அவருக்கு வாய்ப்பு இருந்தது. அதனால் ரசிகர்கள் ஷாக்காகியிருக்கின்றனர். இன்று உண்மையிலேயே என்ன நடந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.