கோதுமை மாவில் சூப்பர் ஸ்வீட் : ஒரு முறை இதை டிரை பண்ணுங்க
செம்ம சுவையான கோதுமை பர்ஃபி முறை இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
1 கப் கோதுமை மாவு
சர்க்கரை 1 கால் கப் சர்க்கரை
கால் கப் தண்ணீர்
3 ஸ்பூன் நெய்
செய்முறை : ஒரு பாத்திரத்தில் கோதுமாவை சேர்த்து கிளர வேண்டும். அதன் நிறம் மாறும் வரை கிளரவும். பொன்னிறமாக மாறும் வரை காத்திருக்கவும். தொடர்ந்து இனியொரு பாத்திரத்தில் தண்ணீர் சர்க்கரை சேர்த்து பாகு தயாரிக்கவும். இது ஒரு கம்பி பதம் வர வேண்டும். தொடர்ந்து இந்த பாகை வறுத்த கோதுமை மாவில் சேர்த்து கிளரவும். தொடர்ந்து நெய் சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். நெயை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். ஒட்டாமல் வந்ததும் வேறு ஒரு பத்திரத்திற்கு மாற்றிவிட்டு, சிறிய நேரம் கழித்து அதை துண்டுகளாக வெட்டி எடுக்கவும்