இந்தியாவின் மொத்த கடன் ரூ.205 லட்சம் கோடி… மத்திய அரசு கடன் மட்டும் இவ்வளவா?
நாட்டில் பிறவிருக்கும் குழந்தையின் தலைக்கு மேல் கூட கடன் இருக்கிறது என்று நாட்டின் கடன் குறித்து நையாண்டியாக கூறுவார்கள். நாட்டின் பொருளாதாரம் ஒரு பக்கம் உயர்ந்தாலுமே, நாட்டின் கடன் அசுர வேகத்தில் அதிகரிக்கிறது.
இந்தநிலையில் 2023-ம் ஆண்டு செப்டம்பர் காலாண்டின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், `நாட்டின் மொத்த கடன் அளவு அல்லது நிலுவையில் உள்ள பத்திரங்களின் மதிப்பு 205 லட்சம் கோடியாக (2.47 டிரில்லியன் டாலர்) உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் வெளியிட்டுள்ள தகவலின்படி,…
*முந்தைய நிதியாண்டின் மார்ச் காலாண்டில் இந்தியாவின் மொத்த கடன் தொகை 200 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு இந்த கடன் தொகை 205 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடன் IRCTC வேற லெவல் திட்டம்; மெட்டல் பங்குகளை வாங்கலாமா; பாக்ஸ் ஆபீஸ் வசூலும் PVR பங்கும் – ஷேர்லக்
*இதில் மத்திய அரசின் கடன் மட்டுமே செப்டம்பர் காலாண்டில் ரூ. 161.1 லட்சம் கோடியாக இருந்தது. மார்ச் காலாண்டில் கடன் 150.4 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 6 மாத கால இடைவெளியில் மட்டும் மத்திய அரசு 10 லட்ச கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனை பெற்றுள்ளது.
*நாட்டின் மொத்த கடனில் மத்திய அரசின் கடன் மட்டும் அதிகபட்சமாக 46.04 சதவிகித பங்காக உள்ளது.
*மாநில அரசின் கடன் 50.18 லட்ச கோடி ரூபாய் (604 பில்லியன் அமெரிக்க டாலர்) உள்ளது. இது நாட்டின் மொத்த கடனில் 24.4 சதவிகிதம்.
*நாட்டின் குறுகிய கால கடன் பத்திரங்கள் என அழைக்கப்படக்கூடிய டி-பில்ஸ் (Treasury bills) பிரிவில், 9.25 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இந்தியாவின் மொத்த கடனில் இது 4.51 சதவிகிதம்.
*கார்ப்பரேட் பத்திரங்களில் 44.16 லட்சம் கோடி கடன் உள்ளது. நாட்டின் மொத்த கடனில் இது 21.52 சதவிகிதம்.
பொருளாதார நிலை…
ஆன்லைன் பத்திர முதலீட்டு தளமான இந்தியாபாண்ட்ஸ்.காம் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷால் கோயங்கா, ஆர்பிஐ, கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Clearing Corporation of India) மற்றும் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (Securities and Exchange Board of India) ஆகியவை வழங்கிய தரவுகளின் அடிப்படையில் அறிக்கையை வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.