வரப்பிரசாதமாகும் இஞ்சியே ஆரோக்கியத்திற்கு சாபம்! ஆச்சரியம் ஆனால் இது உண்மை!
Ginger For Health: குளிர்காலத்தில் இஞ்சி சளி தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது, அதன் பல நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.
- சளி தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாகும் இஞ்சி
- சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் இஞ்சி
- காய்ந்தாலும் காய்ச்சலைப் போக்கும் சுக்கு
குளிர் காலத்தில், ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகள் நல்ல ஆரோக்கியமானவர்களுக்கே வரும் என்ற நிலையில், வயதானவர்கள், நோயெதெரிப்பு சக்தி இல்லாதவர்களுக்கு சிரமம் அதிகரிக்கும். எனவே, குளிர்காலத்தில் ஆரோக்கியத்தின் மீது கவனம் அதிகரிப்பது அவசியம் ஆகிறது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக, குளிர்காலத்தில் சில பொருட்களை உட்கொள்ள வேண்டும், அதில் ஒன்று இஞ்சி.
குளிர்காலத்தில் உணவின் முக்கியத்துவம்
குளிர்காலத்தில், உணவுடன் பல பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் உண்பது ஆரோக்கியம் என்றாலும், நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலும் பலவீனமாகிறது, இதன் காரணமாக பலர் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். குளிர்காலத்தில் உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்என்றும் அதுவே
மேம்படுத்தும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். உணவுப் பழக்கம் சரியில்லை என்றால் செரிமானக் கோளாறுகள், சளி, குளிர் காய்ச்சல் ஏற்படும் வாய்ப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கிறது.
குளிர்காலத்தில் இஞ்சியின் நன்மைகள்
குளிர் காலத்தில் இஞ்சி (Benefits of Ginger) மிகவும் பிரபலமானது, இது தேநீரில் மட்டுமல்ல, உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. குளிர்ந்த காலநிலையில் இஞ்சி ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நல்லது செய்யும் என்று தெரிந்துக் கொண்டால், தினசரி பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்வீர்கள்.