சர்க்கரை நோய் இருக்கா… ‘இந்த’ தவறுகளை மட்டும் செஞ்சுடாதீங்க..!!
நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறைகளில் ஒரு ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஒழுங்கு முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவை உங்கள் நீரிழிவு நோயை மேலும் தீவிரமாக்கும்.
- நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சில கவனக்குறைவுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம்.
- டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சீரான உணவு மிகவும் முக்கியமானது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கை முறைகளில் ஒரு ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஒழுங்கு முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவை உங்கள் நீரிழிவு நோயை மேலும் தீவிரமாக்கும். ஆரோக்கியமான உணவு மற்றும் சீரான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தலாம். இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தினசரி உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, போன்ற செயல்பாடுகள் இல்லாதவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனுடன், அதிகப்படியான துரித் உணவுகளும் இந்த நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இரவில் தாமதமாக உணவை சாப்பிட்டுவிட்டு, உடனே தூங்கினால், நீங்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம். இதனுடன், நீரிழிவு அபாயத்தை உருவாக்கும் அல்லது அதிகரிக்கும் சில தவறுகளை செய்யக் கூடாது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சில கவனக்குறைவுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம்.
1. ஃபிட்னஸில் கவனம் செலுத்தாமல் இருப்பது
நாள் முழுவதும் உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் (Diabetes) வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் எந்த வகையான உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தால், நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ளீர்கள். எனவே, தினமும் குறைந்தது 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். நடைபயிற்சி, ஜாகிங், யோகா, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்றவற்றை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யலாம். நீங்கள் ஏற்கனவே நீரிழிவு நோயாளியாக இருந்தால், உடல் பயிற்சியுடன் கூடவே குறைந்தது 20 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். உடல் செயல்பாடுகளைச் செய்வது உங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில் மூச்சுபயிற்சி ஒவ்வொரு செல்லுக்கும் போதுமான ஆக்ஸிஜனை வழங்குகிறது. கல்லீரல் நச்சுக்களை நீக்குகிறது. இன்சுலின் சரியாக சுரக்க உதவுகிறது.
2. பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது
நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சீரான உணவு மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது இரத்த சர்க்கரையுடன் நேரடியாக தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில், பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உட்கொள்வது ஆபத்தானதுவெள்ளை சர்க்கரை, மாவு, அரிசி, கோதுமை மற்றும் கோதுமையால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இவற்றுக்குப் பதிலாக, உங்கள் உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். அரிசி கோதுமைக்கு பதிலாக சிறுதானியங்களை எடுத்துக் கொள்ளவும். ராகி, சாமை, வரகும் குதிரைவாலி, தினை போன்றவற்றை சாப்பிடுங்கள். எப்போதும் உலர் பழங்களை ஊறவைத்த பிறகு சாப்பிடுங்கள். பசுவின் பால் மற்றும் நெய்யை குறைந்த அளவு உட்கொள்வதும் நன்மை பயக்கும்.