சிறுநீரகத்தை சூப்பர்மேனாக ஆக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

சிறுநீரக  பாதிக்கப்பட்டிருப்பதை சில அறிகுறிகளில், இரத்த சோகை, சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரியும் உணர்வு, சிறுநீரில் இரத்தம், பலவீனம், சோர்வு, பசியின்மை, உயர் இரத்த அழுத்தம், கால் முதல் உறுப்புகள் வரை வீக்கம் ஆகியவை அடங்கும்.  இந்நிலையில், சிறுநீரகத்தை வலுப்படுத்தி, அதன ஆற்றலை பெருக்கும் மூலிகைகளை அறிந்து கொள்ளலாம்.

கிலோய் சிறுநீரகங்களை அஃப்லாடாக்சின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. கிலோய் மூலிகையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சிறு நீரகத்தை ஆல்கலாய்டு ஃப்ரீ ரேடிக்கல்களை அழிக்கிறது.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் என மூன்று பொருள்களையும் சேர்த்து தயாரிக்கப்படும் திரிபலா சிறுநீரகத்தின் திசுக்களை பலப்படுத்துகிறது. இது பிளாஸ்மா புரதம், கிரியேட்டின் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனை இரட்டிப்பாக்குகிறது.

குர்குமின் கொண்ட மஞ்சள் பிளாஸ்மா புரதத்தை மேம்படுத்துகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகளில், சீரம் யூரியா மற்றும் கிரியேட்டினின் அளவை சரிசெய்கிறது. இது சிறுநீரகத்தின் வேலை திறனை அதிகரிக்கிறது.

சிறுநீரகம் சரியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க, தினமும் குறிப்பிட்ட அளவு இஞ்சியை உட்கொள்ள வேண்டும். சளி, தலைவலி  ஆகியவைற்றை  நொடியில் போக்கும் சக்தி கொண்ட  இஞ்சியை உட்கொள்வதால் சிறுநீரகத்தில் வீக்கம் மற்றும் வலி குறைகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *