ஐ.ஐ.டி மாணவி பாலியல் கொடுமை: குற்றவாளிகளுடன் பா.ஜ.க தலைவர்கள்; போட்டோ வெளியிட்ட காங்கிரஸ்
வாராணசியில் உள்ள ஐஐடி (IIT-BHU) மாணவி கூட்டுபாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் வழக்கில் பாஜக நிர்வாகிகள் என்று கூறப்படும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களின் புகைப்படங்களை பிரதமர் மற்றும் பாஜக தலைவர்களுடன் காங்கிரஸ் திங்களன்று பகிர்ந்து கொண்டது.
இதற்கிடையில், பாஜக குற்றவாளிகளிடம் இருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டது – அவர்களின் சமூக ஊடக சுயவிவரங்கள் வாரணாசியில் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் ஒரு பகுதியாக இருப்பதாகக் கூறுகின்றன.
குற்றச்சாட்டின்படி, இந்த சம்பவம் நவம்பர் 1ஆம் தேதி பனாரஸ் இந்து பல்கலைக்கழக (பிஎச்யூ) வளாகத்தில் நடந்தது.
சம்பவம் நடந்து சுமார் 60 நாட்களுக்குப் பிறகு, மூன்று குற்றவாளிகளான குணால் பாண்டே, ஆனந்த் என்கிற அபிஷேக் சவுகான் மற்றும் சக்சம் படேல் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தகவல்களின்படி, குணால் பாண்டே வாரணாசியில் உள்ள பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் வாரணாசி தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார் சக்சம் படேல். இருவரும் பல முக்கிய பாஜக தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் கடந்த மூன்று ஆண்டுகளில்.
பாண்டேவின் முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் மற்றும் பிற கட்சித் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்கள் உள்ளன.