நான் அவர் கூட இருந்திருந்தா கேப்டனை எப்படி பார்த்திருப்பீங்க தெரியுமா? மன்சூர் அலிகான் சொன்னத கேளுங்க
கேப்டனால் அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகர் மன்சூர் அலிகான். அதாவது கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம்தான் முதன் முதலில் மன்சூர அலிகான் தன் திரைப் பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே தனது வில்லத்தனத்தை காட்டி அனைவரையும் அச்சுறுத்தினார்.
அந்தப் படத்தின் வெற்றி, மன்சூர் அலிகானின் அபார நடிப்பு இவற்றால் அவருக்கு தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்க கூடிய வாய்ப்பு வந்தது. 90களில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்த நடிகராகவும் வலம் வந்தார் மன்சூர் அலிகான்.
விஜயகாந்த் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலிகானின் செயலை கண்டித்து ஒரு சமயம் விஜயகாந்தே நேரடியாக திட்டவும் செய்திருக்கிறார். கேப்டனின் மறைவிற்கு இரண்டு நாள்களாக அவர் உடல் அருகேயே காத்துக் கிடந்தார் மன்சூர் அலிகான்.
மன்சூர் அலிகான் இல்லத் திருமணத்திற்கு கூட விஜயகாந்த் கலந்துக் கொண்ட பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில் விஜயகாந்த் அருகில் மன்சூர் அலிகான் மிகவும் பௌவ்யமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது.
மன்சூர் அலிகான் இல்லத் திருமணத்திற்கு கூட விஜயகாந்த் கலந்துக் கொண்ட பழைய வீடியோ ஒன்று வைரலானது. அதில் விஜயகாந்த் அருகில் மன்சூர் அலிகான் மிகவும் பௌவ்யமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடிந்தது.
இந்த நிலையில் நேற்று ஒரு தனியார் யுடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த மன்சூர் அலிகான் கேப்டன் இந்நேரம் இருந்திருந்தால் இரண்டு முறை முதலமைச்சராக இருந்திருப்பார். அதுவும் ராவுத்தர், லியாகத் அலிகான், மன்சூர் அலிகான் எல்லாம் கேப்டன் கூட இருந்திருந்தால் கண்டிப்பாக அவரை முதலமைச்சராக ஆக்கியிருப்போம் என்று கூறினார்.
சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த நெறைஞ்ச மனசு படத்தின் போது நான்தான் கேப்டனிடம் கட்சி ஆரம்பிப்பதை பற்றி பேசினேன் என்றும் தன் பழைய நியாபகங்களை கூறினார் மன்சூர் அலிகான்.