சண்டையே போடாமல் ஸ்ருதிக்கு பல்ப் கொடுத்த முத்து!… காண்டான விஜயா.. நல்லா தான் இருக்குப்பா!..
இன்றைய எபிசோடில் மீனாவுக்காக முத்து புதிய பூக்கடை திறந்ததை பார்த்து அண்ணாமலை மீனாவின் குடும்பத்தார் சந்தோஷப்படுகின்றனர். ஆனால் ரோகினிக்கு பயம் வருகிறது. மீனா சின்ன கடையா இருந்தாலும் அதக்கு ஓனர். நம்ம பார்லரில் வேலை தானே செய்றோம்.
அது தெரிஞ்சா என்ன நடக்குமோ என நினைத்து கொள்கிறார். மீனா முதல் முறையா ஒரு கடைக்கு ஓனாராக போறேன். உங்க பையனால நடக்க போகுது, எங்கள ஆசீர்வாதம் பண்ணுங்க என்று விஜயா, அண்ணாமலை காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி கொள்கின்றனர்.
அதன் பிறகு மீனாவின் அம்மாவிடமும் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு கடையை யார் திறக்க போறாங்க தெரியுமா என்கிறார் முத்து. அம்மா தானே என ரவி கேட்க இல்ல ஸ்ருதி என்கிறார். எல்லார் தலைமையில் இந்த வீட்டோட கடைசி மருமக தான் திறக்க போறாங்க. பொதுவா ஒரு கடையை திறக்க எல்லாரும் செலிப்ரிட்டி தான் கூப்பிடுவாங்க. ஸ்ருதி சினிமால இருக்கதால எங்க கடையும் பிரபலம் ஆகும் தானே அதான் சொல்றேன் என்கிறார்.
எல்லாரும் அமோதிக்க ஸ்ருதி ரிப்பன் கட் செஞ்சு கடையை திறந்து வைக்கிறார். அண்ணாமலையிடம் 100 ரூபாய் கொடுத்து பூ வாங்கி வியாபாரம் செய்ய சொல்கிறார். அவரும் வாங்கி விஜயாவிடம் கொடுக்கிறார். உடனே முத்து ஸ்ருதியிடம் ஒரு பணக்கவரை நீட்டுகிறார். செலபிரிட்டி வந்தா காசு கொடுப்பாங்கள அதான் இதுல 2500 இருக்கு எனக் கொடுக்கிறார்.
ரவியும் வாங்கிக்கோ எனச் சொல்ல ஸ்ருதி கடுப்புடன் வாங்கி கொண்டு உள்ளே சென்று விடுகிறார். வீட்டுக்குள் வந்த விஜயா கடுப்பாகி இருக்க பார்வதி போன் செய்து வாழ்த்து சொல்கிறார். தொடர்ந்து உறவினர்களிடம் கால் வர இவங்களுக்கு எப்படி தெரியும் எனக் கேட்க முத்து போஸ்ட் போட்ருக்கான்ல எனச் சொல்லிவிடுகிறார் பார்வதி.