ஜப்பான் விமான விபத்தில் 379 பேரின் உயிரை காப்பாற்றியது இப்படிதானா? இவங்க தான் நிஜ ஹீரோக்கள்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனேடா என்ற விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு ஜேஏஎல் 516 என்ற விமானம் தரையிறங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அப்பொழுது அதே ஓடு பாதையில் கடலோர காவல் படை விமானமும் புறப்படுவதற்காக தயார் செய்யப்பட்டு கொண்டிருந்தது.

கடலோர காவல் படையின் விமானத்தில் மோதாமல் சற்று தள்ளி தரையிறங்க ஜேஏஎல் 516 என்ற விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் விமானம் தரை இறங்கிய போது எதிர்பாராத விதமாக இரு விமானங்களும் மோதின. இதில் 379 பயணிகளுடன் தர இயங்கிய ஜேஏஎல் 516 என்ற விமானம் தீப்பிடித்து ஓடுபாதையில் சில நூறு மீட்டர் தூரம் பயணித்தது.

நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக விமானத்திற்கு உள்ளே இருந்த 379 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களையும் பத்திரமாக உயிருடன் மீட்டார்கள். விமானம் தீ பிடித்த ஒரு சில நிமிடங்களிலேயே அத்தனை பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் கடலோர காவல் படை விமானம் தீப்பிடித்து எரிந்தது. அதன் உள்ளே இருந்த கேப்டன் தவிர மற்ற ஐந்து ஊழியர்கள் பரிதாபமாக தீயில் கருகி பலியானார்கள்.

379 பேர் பத்திரமாக ஒரு சில நிமிடங்களில் மீட்கப்பட்டது எப்படி என்ற ஆச்சரியம் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இவ்வளவு பெரிய தீ விபத்தில் எப்படி அந்த விமானத்திற்கு உள்ளே இருந்த ஒருவரும் உயிர் இழக்காமல் தப்பினார்கள் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அவ்வப்போது பாதுகாப்பு டிரில்களை நடத்தி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கியது தான் காரணமாக சொல்லப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *