IND vs SA – சச்சினையே கோபம் அடைய செய்த இந்திய அணி.. இதுக்கு மேல அசிங்கப்படுத்த முடியாது

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இரண்டாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி சிராஜின் அபார பந்துவீச்சால் 55 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதில் முகமது சிராஜ் தொடர்ந்து ஒன்பது ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் ஆடியது 153 ரன்களுக்கு நான்கு விக்கெட் என இருந்த இந்திய அணி குறைந்தபட்சம் 250 ரன்கள் அடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அடுத்த 11 பந்துகளில் 6 விக்கெட்டுகள் சரிந்தது. இதனால் 153 ரன்களில் இந்திய அணி சுருண்டது. இதன் அடுத்து 98 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகின்றனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 62 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்கா அணி எடுத்துள்ளது.
இது இந்திய ரசிகர்களை மட்டுமல்லாமல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது குறித்து பேசிய அவர் 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட்டின் முதல் போட்டியில் ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் இழந்து இருக்கிறது. இதனை கொஞ்சம் கூட நம்ப முடியவில்லை.
தென்னாபிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தபோது நான் என்னுடைய விமான பயணத்தை ஆரம்பித்தேன். தற்போது நான் வீட்டில் வந்து அமர்ந்திருக்கிறேன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டியை பார்த்தால் மீண்டும் தற்போது தென்னாபிரிக்க அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்டது என்று காட்டுகிறார்கள்.
அப்படி நான் என்ன மிஸ் செய்தேன் என்று சச்சின் விமர்சித்து இருக்கிறார். பொதுவாக இந்திய அணி வீரர்களை சச்சின் என்றுமே விமர்சித்ததில்லை. ஆனால் தற்போது பூஜ்ஜியம் ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இந்திய அணி இழந்ததை சச்சினாலயே ஜீரணிக்க முடியவில்லை. தற்போது தென்னாபிரிக்க அணி 36 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இன்று விளையாடப் போகிறது.