பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள இந்தியா ஆல் அவுட் ஆயிடுச்சு.. வீரர்களை கிண்டல் செய்த ரவி சாஸ்த்ரி
கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் மிகப்பெரிய முன்னிலையை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 153 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
153 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற நிலையில் இந்தியா இருந்தபோது அடுத்த 11 பந்துகளில் எந்த ஒரு அணியும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்தது. முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 300 ரன்கள் எடுத்திருந்தால் மிகப்பெரிய வெற்றி உறுதியாகி இருக்கும்.
ஆனால் இந்திய அணி அடுத்தடுத்து ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, பும்ரா,சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு பேர் டக் அவுட் ஆகி சாதனையை படைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து தென்ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்ஸில் 62 ரன்கள் மூன்று விக்கெட்டுகள் இழந்து விளையாடி வருகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து ரவி சாஸ்திரி கிண்டல் அடித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் யாராவது பாத்ரூம் சென்று திரும்பி வந்து பார்த்தால் இந்திய அணி அதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் 153 ரன்கள் இழந்திருக்கும் என்று கூறினார்.ரவி சாஸ்திரியின் இந்தப் பேச்சைக் கேட்டதும் அங்கிருந்து கிரிக்கெட் வர்ணனையாளர்கள் சிரித்து விட்டனர்.
இதை தொடர்ந்து பேசிய ரவி சாஸ்திரி மும்பை கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான நபர்களான ஜெய்ஸ்வால் ஸ்ரேயாஸ் ஆகியோர் ஸ்கோர் போர்டு பணியாளர்களை கஷ்டப்படுத்தவில்லை. அவர்களுடைய யுக்தி குறைபாடு தற்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டதாகவும் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.