இந்தியாவின் வெற்றி இலக்கு 40 தான் இருந்திருக்கும்.. ராகுல் செய்த ஒரே தவறு.. ஏய்டன் மார்க்கரம் சதம்
கேப் டவுன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் செய்த ஒரே தவறு இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கு கடினமாக மாறி இருக்கிறது. கேப்டவுனில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கிற்கு நரகம் போல் இருக்கிறது.
இங்கு பேட்ஸ்மேன்கள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலையில் போகப் போக ஆடுகளம் மேலும் பேட்டிங்கிற்கு கடினமாக மாறும். இதனால் ஒரு ரன்னை தென்னாப்பிரிக்கா அணி கூடுதலாக அடித்தாலும் அது இந்தியாவுக்கு கஷ்டம் தான்.
ஆனால் கே எல் ராகுல் செய்த ஒரு தவறால் தென்னாப்பிரிக்கா அணி கிட்டத்தட்ட 30 ரன்கள் கூடுதலாக அடித்து விட்டது. இதனால் இந்தியாவுக்கு 40 ரன்கள் என இருக்க வேண்டிய இலக்கு தற்போது 79 ரன்கள் ஆக மாறிவிட்டது. முதல் இன்னிங்ஸில் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்கள் ஆட்டம் இழக்க இந்திய அணி 153 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 98 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாபிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
இதில் தென் ஆப்பிரிக்காவில் கேப்டன் டீல் கார் டேவிட் பெட்டிங்கம் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க எய்டன் மார்க்கரம் மட்டும் அபாரமாக நின்று சதம் அடித்தார். 103 பந்துகளை எதிர்கொண்ட அவர் 106 ரன்கள் விளாசினார். இதில் 17 பவுண்டரிகளும் இரண்டு சிக்சர்களும் அடங்கும். இந்த நிலையில் மார்க்கரம் 73 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா வீசிய ஒரு அபாரமான பந்தை அடிக்க முற்பட்டார். ஆனால் அது கேஎல் ராகுல் இடம் கேட்ச் ஆக பறந்தது.