Mars Transit: உஷாராக இருக்க வேண்டிய ராசிகள்..செவ்வாய் புரட்ட போகிறார்

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் வீரம், விடாமுயற்சி, மன தைரியம், தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றும் பல்வேறு விதமான தாக்கங்களை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.

செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் நுழைந்தார். இவருடைய இடமாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசி

செவ்வாய் பகவானால் உங்களுக்கு கவலையான சூழ்நிலை உருவாகப் போகின்றது. திடீரென செலவுகள் ஏற்படும் பணி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கையாக இருங்கள் உறவினர்களால் சிக்கல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் மனவருத்தம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மிதுன ராசி

செவ்வாய் பகவானால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தினரால் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை துணையோடு சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருங்கள்.

விருச்சிக ராசி

உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப உறவில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. பயணங்கள் நல்ல பலன்களை தராது.

மகர ராசி

செவ்வாய் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து செலவுகளும் உண்டாகும். பணவரவு சில சிக்கல்கள் ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளில் சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியம் மோசமாக மாறலாம் எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *