அனுமன் ஜெயந்தி 2024 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்…!

அஞ்சனையின் மைந்தன், வாயு புத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் பிறந்த நாள்தான் அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அனுமன் வலிமை, அறிவு, துணிச்சல், புகழ், வீரம், ஆரோக்கியம், சாதுர்யம் என அனைத்தையும் தன்னுள் கொண்டவர். இவ்வளவு திறமைகளை கொண்ட அனுமன் மார்கழி மாதம் அமாவாசை திதியும், மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமன் ஜெயந்தி 2024 எப்போது?

அனுமன் ஜெயந்தி அன்று அனுமனை வழிபட்டால், சிவனையும், பெருமாளையும் வணங்கிய புண்ணியம் கிடைக்கும். மேலும் அனுமன் ஜெயந்தியில் அனுமனைத் வணங்கினால், இதுவரை சந்தித்த துன்பங்கள் மற்றும் தொல்லைகள் நீங்கும். நன்மைகள் தேடி வரும். அனுமன் ஜெயந்தி வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ் நாட்காட்டியின் படி, ஜனவரி 10ஆம் தேதி மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் அன்று அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

மார்கழியின் அமாவாசை ஜனவரி 10ம் தேதி இரவு 08.05 மணிக்கு துவங்கி, ஜனவரி 11ம் தேதி மாலை 06.31 வரை அமாவாசை திதி உள்ளது. மூல நட்சத்திரம் ஜனவரி 10ஆம் தேதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனுமனை பூஜிக்கும் முறை

ராமர் அல்லது அனுமன் கோயிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை சாற்றி வழிபட வேண்டும். அனுமன் உணவுப்பிரியர். நன்றாக சாப்பிடுவார் அவருக்கு பொரி, அவல், கடலை, சர்க்கரை, வெண்ணெய், தேன், பானகம், இளநீர், பழங்கள், வாழைப்பழம் போன்றவைகளை நைவேத்தியமாக படைக்கலாம்.

சில பக்தர்கள் வீட்டிலேயே அனுமனுக்கு பூஜை செய்து பிராத்தனைகளை செய்வார்கள். அப்படி பூஜை செய்யும் போது, அனுமனுக்கு இனிப்புகள், பழங்கள் மற்றும் மெது வடை ஆகியவற்றை படைப்பார்கள். அதோடு அனுமனை பூஜிக்கும் போது, அவருக்கான ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் அனுமன் சாலிசா போன்றவற்றை பாடினால் சிறப்பு.

மேலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றினால் தடைகள் நீங்கி கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அவருக்கு ஸ்ரீராம ஜெயம் எழுதி மாலை சூட்டிப் போட்டால் அனைத்துச் செயல்களும் வெற்றியடையும் என்பது ஐதீகம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *