ஜனவரியில் 16 நாள்கள் வங்கி விடுமுறை: நோட் பண்ணுங்க!
Bank Holidays January 2024: ஜனவரி 2023 வங்கி விடுமுறை நாட்களை பிராந்தியங்கள் வாரியாக பார்க்கலாம். மேலும், வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
ஜனவரி 2024 இல், இரண்டாவது, நான்காவது சனி, ஞாயிறு மற்றும் பிற பிராந்திய விடுமுறைகள் உட்பட 16 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
2024 ஜனவரி வங்கி விடுமுறை
ஜன.1 ஆங்கிலப் புத்தாண்டு
ஜன.11 ஐஸ்வால் நகரில் விடுமுறை
ஜன.12 சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் (கொல்கத்தாவில் விடுமுறை)
ஜன.15 பொங்கல்/ மகர் சக்கராந்தி விடுமுறை
ஜன.16 திருவள்ளூர் தினம் (சென்னையில் வங்கிகள் விடுமுறை)
ஜன.17 குரு கோவிந்த் சிங் பிறந்த தினம் (சண்டிகர், சென்னையில் வங்கி விடுமுறை)
ஜன.22- இம்பாலில் வங்கிகள் விடுமுறை
ஜன.23 நேதாஜி பிறந்த தினம் (கொல்கத்தா மற்றும் இம்பாலில் வங்கி விடுமுறை)
ஜன.25 தை பூசம், ஹஸ்ரத் அலி பிறந்த தினம்லக்னோவில் வங்கிகள் விடுமுறை
ஜன.26 குடியரசுத் தினம்
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் இரண்டும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று 2015 இல் RBI அறிவித்தது. மற்ற சனிக்கிழமைகளில், வங்கிகள் முழு நாள் செயல்படும். நாடு முழுவதும் உள்ள வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.