ஜப்பானில் ஒரே நாளில் 150 நிலநடுக்கங்கள்… என்ன காரணம் தெரியுமா?

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர், அதுமட்டுமின்றி 2011-ல் நாட்டின் வடக்குப் பகுதியைப் பேரழிவிற்குள்ளாக்கிய சுனாமி பற்றிய அச்சத்தையும் மீண்டும் எழுப்பியது.

உலகின் மிகவும் அதிகமாக நில அதிர்வு ஏற்படும் மண்டலங்களில் ஜப்பான் நாடு ஒன்றாகும். முழு நாடும் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிலநடுக்கம் மற்றும் அதன் விளைவுகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

என்ன நடந்தது?

ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கடந்த ஜனவரி 1ஆம் தேதி மாலை 4 மணிக்கு உள்நாட்டில் ஏற்பட்டது. குறைந்தது 48 பேர் இதில் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கம் ஜனவரி 1ஆம் தேதி நாட்டின் கடலோரப் பகுதிகள் அனைத்திற்கும் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. புத்தாண்டின் தொடக்கத்தில், பலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடிக் கொண்டிருந்த போது, ​​நாட்டை சுனாமி அச்சம் பற்றிக் கொண்டது. ஜப்பான் வானிலை ஆய்வு மையம் ஜனவரி 1 அன்று ஐந்து மீட்டர் (16 அடி) அலைக்கான எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால், அது ஜனவரி 2ஆம் தேதி காலை 10 மணிக்கு குறைந்தது 1.2 மீட்டர் உயர அலையைப் பதிவுசெய்த பின்னர் அனைத்து சுனாமி எச்சரிக்கைகளையும் நீக்கப்பட்டது.

இது 2018 ஆம் ஆண்டிலிருந்து ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். இதன் விளைவாக குறைந்தது 200 கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டது, ஆயிரக்கணக்கானோர் மின்சாரம் மற்றும் நீர் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகினர், மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

ஜப்பானில் இதே அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கடந்த கால நிகழ்வுகள் காட்டுகின்றன என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் தொடர்ந்து நில அதிர்வுகளால் பாதிக்கப்படுகின்றனர், இது இப்பகுதியில் உள்ள கட்டமைப்புகளை இன்னும் பெரிய ஆபத்தில் ஆழ்த்துகிறது என கூறியுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *