முஸ்லிம்கள் பெயரில் போலி Email Id; `யோகி, ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்’ – இருவர் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில், வரும் 22-ம் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், ‘alamansarikhan608@gmail.com’ (ஆலம் அன்சாரி), ‘zubairkhanisi199@gmail.com’ (ஜூபைர் கான்) ஆகிய மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து, ‘உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வெடிகுண்டு வைத்து கொலைசெய்யப் போகிறோம். மேலும், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை வெடிவைத்துத் தகர்க்கப்போகிறோம்’ என மிரட்டல் வந்தது.
Two accused Omprakash Mishra and Tahar Singh sent email threatening to blow up Ram Mandir, UP CM Yogi Adityanath and STF Chief Amitabh Yash with bombs citing ISI by creating fake IDs of Zubair Khan (zubairkhanisi199@gmail.com) & Alam Ansari (alamansarikhan608@gmail.com ) were… pic.twitter.com/8mEvBu6CKb
— Mohammed Zubair (@zoo_bear) January 3, 2024
இந்த மெயில் தொடர்பாக வழக்கு பதிவுசெய்த உத்தரப்பிரதேச சிறப்பு அதிரடிப்படை, தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தது. அதன் முடிவில், லக்னோவில் உள்ள கோமதி நகர் விபூதி காண்ட் பகுதியைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் மிஸ்ரா மற்றும் தஹர் சிங் ஆகியோரை கைதுசெய்திருக்கிறது. இவர்கள் இருவரும் பாராமெடிக்கல் நிறுவனத்தில் பணிபுரிவதும் தெரியவந்திருக்கிறது.
இருவர்மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணை மேறகொண்டுவருகிறது. இவர்கள் இருவரும் இஸ்லாமியர்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி, இத்தகைய மிரட்டலை விடுத்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.