என்ஜீனியரிங் வரை படிச்சு என்ன பிரயோஜனம்? கார் டெக்னாலஜியை இந்த அளவுக்கு கண்மூடித்தனமா நம்பக் கூடாது!!
அஸ்ஸாம் (Assam) மாநிலத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் ஒருவர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரின் அடாஸ் சிஸ்டத்தை தவறான முறையில் பயன்படுத்தி உள்ளார். அப்படி என்ன செய்தார் அந்த இளைஞர்? இந்த மஹிந்திரா காரில் வழங்கப்படும் அடாஸ் தொகுப்பில் என்னென்ன வசதிகள் இடம்பெறுகின்றன? வாருங்கள் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அடாஸ் (ADAS) என சுருக்கமாக அழைக்கப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இன்றைய கால மாடர்ன் கார்களில் பரவலாக இடம்பெற ஆரம்பித்துள்ளது. டிரைவரின் உதவி இல்லாமல், சில சமயங்களில் காரே தானாக இயங்கக்கூடிய வகையில் அடாஸ் வடிவமைக்கப்படுகிறது. அதாவது, காரை சுற்றிலும் பொருத்தப்படுகின்ற சென்சார்கள் மூலமாக சாலையின் தன்மை, மற்ற வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை அறிந்து அதற்கேற்ப எச்சரிக்கைகளை அடாஸ் வழங்குகிறது.
சில நேரங்களில் தேவைப்பட்டால், காரின் கண்ட்ரோலையும் அடாஸ் தானாக எடுத்துக் கொள்ளும். இந்தியாவில் முதல்முறையாக அடாஸ் உடன் எம்ஜி க்ளோஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, அடுத்த சில மாதங்களிலேயே மஹிந்திரா நிறுவனம் அதன் எக்ஸ்யூவி700 காரை அடாஸ் உடன் அறிமுகம் செய்தது. முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி500 காரின் இடத்திற்கு, மஹிந்திரா எக்ஸ்யூவி700 2021 ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
கார்களில் அடாஸ் வழங்கப்படுவதன் முக்கிய காரணம் என்னவென்றால், விபத்து நேரும் சமயங்களில் டிரைவரால் காரை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போகலாம் என்பதால், பயணிகளின் உயிரை காப்பாற்ற வழங்கப்படுகிறது. ஆனால், நம் இந்தியர்களை பற்றித்தான் தெரியுமே. எந்தவொரு புதிய தொழிற்நுட்பத்தையும் தவறாக பயன்படுத்தி பார்க்கவே நம் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்களே…