மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு.. ஆலோசித்தது என்ன?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

சென்னையில் கடந்த 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்து பெரும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த வெள்ள பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மீண்டு வந்த நிலையில், கடந்த 17, 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. வரலாறு காணாத அளவுக்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழையால் இரு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. காயல்பட்டினத்தில் 94 செ.மீ. மழை பெய்ததால் அந்தப் பகுதியே வெள்ளக்காடானது.

ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும், மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தற்காலிக நிவாரண தொகையாக ரூ.7 ஆயிரத்து 33 கோடி, நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12 ஆயிரத்து 659 கோடியையும் விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய இணை அமச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

அப்போது வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து பேசி தமிழகத்திற்கு தேவையான நிதியை அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்தநிலையில் தான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். தமிழக வெள்ள பாதிப்பு தொடர்பாக நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக அண்ணாமலை மற்றும் எல். முருகன் ஆகியோர் சந்தித்து பேசியிருக்கிறார்கள்.இந்த சந்திப்பின் போது சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்தும் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாக நிதி அமைச்சரிடம் இருவரும் கோரிக்கை முன்வைத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *