தொப்பை கொழுப்பு காணாமல் போகும்… எடை இழப்பில் மாயம் செய்யும் சூப்பர் டிப்ஸ்!!
இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது.
எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக எடை கொண்டவர்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான சில வழிகளை இந்த பதிவில் காணலாம்.
தொப்பை கொழுப்பு (Belly Fat)
வயிற்றைச் சுற்றி படிந்திருக்கும் கொழுப்பு வெளியேற அதிக நேரம் எடுக்கும். இது நம் தோற்றத்தை மோசமக்கி நமது ஆளுமையையும் கெடுகிறது. இது மட்டுமல்லாமல், இதனால் உடலில் பல நோய்களும் ஏற்படுகின்றன. தவறான பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்றில் கொழுப்பு சேருகிறது. வயிற்றில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும், ஆனால் அதை அகற்றுவது மிகவும் கடினம். இதைப் போக்க, உடற்பயிற்சி (Exercise) செய்வது மற்றும் சரியான உணவைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்வதை தவிர்க்க, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றிலிருந்து விலகி இருப்பது மிக அவசியம். அதோடு, உங்கள் உணவில் முழு தானியங்கள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்க்க வேண்டும்.
தொப்பை கொழுப்பை குறைக்க (Belly Fat Reduction Tips)
1. எண்ணெய் மற்றும் சர்க்கரை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்
எண்ணெய் மற்றும் சர்க்கரை (Sugar) ஆகியவை வயிற்று கொழுப்பை அதிகரிப்பதற்கு அதிக அளவில் காரணமாகின்றன. எனவே, எடை இழப்பு (Weight Loss) முயற்சியில் இருக்கும்போது, அவை முற்றிலும் குறைக்கப்பட வேண்டும் அல்லது நிறுத்தப்பட வேண்டும். இதை உங்களால் செய்ய முடிந்தால் 1 வாரத்தில் இயற்கையாகவே எடை குறையும்.
2. இஞ்சி டீ
ஆயுர்வேதத்தில் (Ayurveda), இஞ்சி (Ginger) செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே இஞ்சி டீ குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் அதில் பால் சேர்க்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இஞ்சியை தண்ணீரில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கவும்.