அசிங்கமாக சண்டையிட்டுக் கொள்ளும் ரஜினி, விஜய் ரசிகர்கள்
அப்புறம் பார்த்தால் அப்படி பண்ணது ரஜினி சார்,” என ஜாலியாகக் கூறியிருந்தார்.’த கோட்’ படத்திற்காக வெங்கட் பிரபு, ரஜினி ரசிகரை கிண்டலடித்திருந்ததால், பதிலுக்கு ரம்பாவின் இந்த பேட்டி விவகாரத்தை விஜய் ரசிகர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். “ரம்பாவிடம் அத்து மீறிய ரஜினி” என்ற ஹேஷ்டேக்கில் அதை ஒரு பாலியல் துன்புறுத்தல் போல சித்தரித்து பதிவுகளைப் போட ஆரம்பித்தனர். பதிலுக்கு ரஜினி ரசிகர்கள், “ஆம்பள ஷகிலா விஜய்” என ஆரம்ப காலங்களில் விஜய் நடித்த படங்களிலிருந்து பல ஆபாசமான காட்சிகளை எடுத்து பதிவிட்டனர். அந்த சண்டை நேற்றும் தொடர்ந்தது.
வார்த்தைகளால் இங்கு குறிப்பிட முடியாத அருவருப்பான ஹேஷ்டேக்குளால் சண்டையத் தொடர்ந்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுக்கு இடையேதான் கடந்த சில வருடங்களாகவே சண்டைகள் நடப்பது வழக்கம்.ஆனால், ‘ஜெயிலர்’ விழாவில் ‘காக்கா கழுகு’ கதையை ரஜினி சொன்ன பிறகு, ‘லியோ படம் வெளியான பிறகு ரஜினி, விஜய் ரசிகர்கள் மோதல்தான், மிகவும் மோசமாகி வருகிறது. வழக்கம் போல சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களுமே இது பற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.